Tuesday, June 2, 2009

பிரித்தானியா இலங்கைக்கு ஆயுதங்களை விற்பனை செய்துள்ளது: த ரைம்ஸ் தகவல்

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தை முன்னெடுக்க பிரித்தானியா மற்றும் சில ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் இலங்கைக்கு ஆயுதங்களை விற்பனை செய்துள்ளதாக த ரைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
சுமார் 13.6 மில்லியன் ஸ்ரேலிங் பவுண்ட்ஸ் பெறுமதியான இயந்திர துப்பாக்கிகள், இராணுவ வாகனங்கள் உள்ளிட்ட பல்வேறு பட்ட இராணுவ தளபாடங்களை பிரித்தானியா இலங்கைக்கு விற்பனை செய்துள்ளது.

ஸ்லோவாக்கியா 1.1 மில்லியன் ஸ்ரேலிங் பவுண்ட்ஸ் பெறுமதியான ஆயுதங்களையும், பல்கேரியா 1.75 ஸ்ரேலிங் பவுண்ட்ஸ் பெறுமதியான ஆயுதங்களையும் விற்பனை செய்துள்ளன.

இந்த அனைத்து ஆயுத கொடுக்கல் வாங்கல்களும் பூர்த்தியடைந்துள்ளனவா என்பது குறித்து உறுதிப்படுத்த முடியாத நிலை காணப்படுவதாக குறித்த பத்திரிகை சுட்டிக்காட்டியுள்ளது.

இராணுவ தளபாட விற்பனைக்கு அரசாங்கங்கள் அனுமதியளித்த போதிலும், இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டனவா என்பது குறித்து சரியான தகவல்கள் கிடைக்கப்பெறவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

மோசமான மனித உரிமை நிலைமைகள் காணப்படும் நாடுகளுக்கோ அல்லது உள்ளக பிரச்சினைகள் காணப்படும் நாடுகளுக்கோ ஐரோப்பிய ஒன்றியம் ஆயுதங்களை விநியோகம் செய்வதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கைக்கு தொழினுட்ப உதவிகளை வழங்கிய பாகிஸ்தான் வான்படை

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தை முன்னெடுக்க பாகிஸ்தான் வான் படையினர் வழங்கிய தொழில்நுட்பம் சார்ந்த உதவிகளுக்கு பாகிஸ்தானிற்கான இலங்கை தூதுவர் எயார் மார்ஷல் ஜயலத் வீரகெட்டி நன்றி தெரிவித்துள்ளார்.

நேற்று மாலை இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

முக்கியமாக சீன எப் - 7 ஜெட், சி- 130 விமானங்களிற்கான தொழில் நுட்ப உதவிகளையும் பயிற்சிகளையும் வழங்கியமைக்காக அவர் இதன்போது நன்றி தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

***!!!!!!!!!!அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!!!!!!***

எமது அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!எமது இணயத்தளம் மிக விரைவில் ஆரம்பிக்க இருக்கின்றது என்பதை அறியத் தருகின்றோம்.பல இன்னல்களையும் தாண்டி இறுதி இலக்கை நோக்கி ஆரம்பிக்கப்படவுள்ளது.இந்த வலைப்பதிவு ஊடாக உங்கள் அனைவரையும் சந்திப்பத்தில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.இப்படிக்கு தாய்மடி இயக்குணர்கள். இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது!! -மேதகு வே. பிரபாகரன்.