இலங்கையில் அரச படையினருக்கும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நடைபெற்ற யுத்தத்தின் போது பொதுமக்கள் கொல்லப்பட்ட சம்பவங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் அமைப்பு அலட்சிய போக்கை கடைபிடிக்கவில்லை என அதன் பொதுச் செயலாளர் பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.
யுத்தத்தின் போது இடம்பெற்ற பொதுமக்கள் இழப்புக்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் அமைப்பு குறைத்து மதிப்பீடு செய்துள்ளதாக உலக நாடுகள் குற்றம் சுமத்தியிருந்தன. யுத்தத்தின் போது 20,000 பொதுமக்கள் கொல்லலப்பட்டதாக வெளியான தகவல்கள் ஐக்கிய நாடுகள் அமைப்பினால் வெளியிடப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
பொதுமக்கள் இழப்புக்கள் தொடர்பான தகவல்களை ஐக்கிய நாடுகள் அமைப்பு வேண்டுமென்ற குறைத்து வெளியிட்டதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களை முழுமையாக நிராகரிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகளின் பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். கொழும்புக் கிளையிலோ அல்லது தலைமைக் காரியாலயத்திலிருந்தோ இவ்வாறான புள்ளி விபரங்கள் வெளியிடப்படவில்லை என சுட்டிக்காட்டப்படுகிறது.
No comments:
Post a Comment