விடுதலைப்புலிகளுக்கு எதிராக இலங்கை அரசு நடத்திய போரை கடுமையாக விமர்சித்து வரும் கொழும்பைச் சேர்ந்த அறிஞர்கள் அமைப்பான "மாற்றுக் கொள்கைகளுக்கான மையம்' என்ற அமைப்புக்கு மிகக்கடுமையான விளைவுகள் ஏற்படும் என்று மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
அந்த அமைப்புக்கு சிங்கள மொழியில் வந்துள்ள கடிதத்தின் பகுதிகள் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
"தேச துரோகிகளுக்கு அறிவிப்பு" என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ள அந்த கடிதத்தில், கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்த போர் தற்போதைய அரசாங்கத்தின் அர்ப்பணிப்பாலும், அச்சமற்ற இராணுவ தளபதிகளாலும், துணிச்சல் மிகுந்த போர் வீரர்களாலும் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
தங்களை போன்ற தேச துரோகிகளின் நடவடிக்கைகளை தோற்கடித்ததன் மூலமாகவும் இது சாதிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் இறையாண்மைக்கும், ஒருமை தன்மைக்கும் குந்தகம் விளைவிக்கும் வகையில் அமைந்துள்ள தங்கள் செயல்பாடுகள் அனைத்தையும் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும், இல்லாவிட்டால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் அந்த கடிதத்தில் அந்த அமைப்புக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment