Monday, June 1, 2009

பிரித்தானிய தமிழர் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் ஈவினிங் ஸ்டான்டட் நாளிதழ்

இன்றைய ஈவினிங் ஸ்டான்டட் (EVENING STANDARD) நாளிதழ்,.. பிரித்தானியாவில் ஈழத் தமிழர்கள் நடத்தும் போராட்டம் அடேல் பாலசிங்கம் அம்மையாரால் தூண்டிவிடப்பட்ட போராட்டம் என வர்ணித்து செய்தி வெளியிட்டுள்ளது.

உடல் நலம் குன்றிய நிலையில் உள்ள அடேல் பாலசிங்கம் அம்மையாரை, சிறுவர்களுக்கு சயனைட் வழங்கியவர் என்றும் அவர் தூண்டுதலின் பெயரில் பிரித்தானியாவில் பலபோராட்டங்கள் நடப்பதாகவும் செய்தியை வெளியிட்டுள்ளது ஈவினிங் ஸ்டான்டட்(EVENING STANDARD) நாளிதழ்.

எமது விடுதலைப் போராட்டத்தை வெளிநாடுகளில் சீர்குலைக்க, இலங்கை அரசு சில செய்தியாளர்களை விலைக்கு வாங்கி இப்படியான கட்டுரைகளை நாளிதழ்களில் பிரசுரிக்கச் செய்கிறது. இந்த கட்டுரையை எழுதியவர் அமர் சிங் எனும் ஒரு சீக்கியர் ஆவார். பிரித்தானியா வாழ் அனைத்துத் தமிழ் உறவுகளும் கீழ்காணும் மின்னஞ்சல்லூடாக குறிப்பிட்ட நாளிதழின் ஆசிரியருடன் தொடர்புகொண்டு, உங்கள் கண்டனங்களை உடனே வெளிப்படுத்துங்கள்.

editor@standard.co.uk

இங்கு மக்கள் உண்ணாவிரதம் , மற்றும் தொடர்போராட்டம் என தமது சக்திக்கு மீறி உணர்ச்சிபூர்வமாக முனேடுத்துவரும் நிலையில், எமக்கு உதவிசெய்யவில்லை என்றாலும் பரவாயில்லை. உபத்திரவம் செய்யாமல் இருந்தால் அதுவே போது என்பதே எமது மக்களின் ஒருமித்த கருத்தாக இருக்கவேண்டும்...

No comments:

Post a Comment

***!!!!!!!!!!அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!!!!!!***

எமது அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!எமது இணயத்தளம் மிக விரைவில் ஆரம்பிக்க இருக்கின்றது என்பதை அறியத் தருகின்றோம்.பல இன்னல்களையும் தாண்டி இறுதி இலக்கை நோக்கி ஆரம்பிக்கப்படவுள்ளது.இந்த வலைப்பதிவு ஊடாக உங்கள் அனைவரையும் சந்திப்பத்தில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.இப்படிக்கு தாய்மடி இயக்குணர்கள். இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது!! -மேதகு வே. பிரபாகரன்.