Monday, June 1, 2009

இலங்கையில் ஏற்பட்ட தமிழ் பொதுமக்கள் இழப்பிற்கு இந்தியா பொறுப்பேற்கவேண்டும்: இந்திய முன்னாள் இராணுவ அதிகாரி

இலங்கையில் சுமார் 20 ஆயிரம் பொதுமக்கள் கடந்த மாதம் வன்னியில் இடம்பெற்ற இறுதி கட்ட யுத்தத்தின் போது கொல்லப்பட்டமைக்கு இந்தியாவே பொறுப்பேற்க வேண்டும் என இந்திய முன்னாள் இராணுவ அதிகாரி மேஜர் ஜெனரல் அசோக் மேத்தா குற்றம் சுமத்தியுள்ளார்.
இலங்கையில் இந்திய அமைதி காக்கும் படையினர் நிலைகொண்டிருந்த போது அதன் கட்டளைத் தளபதியாக இருந்த மேஜர் ஜெனரல் அசோக் மேத்தா இலங்கையின் இந்த யுத்தத்தில் இந்தியா பொறுப்பற்ற ரீதியில் செயற்பட்டதாக குற்றம் சுமத்தியுள்ளார்.

இந்தியா பொதுமக்களின் இழப்புகளை தவிர்ப்பதில் தோல்வி கண்டுள்ளதாக இரண்டு சர்வதேச மனித உரிமை குழுக்கள் குற்றம் சுமத்தியுள்ளதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

களத்தில் என்ன நடக்கிறது என்பதை அறியாமலேயே இந்தியா இந்த விடயத்தில் நடத்து கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் உள்ள 60 மில்லியன் தமிழர்களை புறக்கணித்து இலங்கைக்கு இராணுவ தளபாடங்களும் பயிற்சிகளும் புலனாய்வு ஊக்குவிப்புகளும் கடந்த 3 ஆண்டுகளாக வழங்கப்பட்டு வந்தன.

அத்துடன், சீனாவுக்கும், பாகிஸ்தானுக்கும் ஈடாக காங்கிரஸ் தலைமையிலான இந்தியா இலங்கைக்கு ஆயுத விற்பனையை கடந்த சில வருடங்களாக மேற்கொண்டு வந்ததாகவும் மேத்தா சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments:

Post a Comment

***!!!!!!!!!!அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!!!!!!***

எமது அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!எமது இணயத்தளம் மிக விரைவில் ஆரம்பிக்க இருக்கின்றது என்பதை அறியத் தருகின்றோம்.பல இன்னல்களையும் தாண்டி இறுதி இலக்கை நோக்கி ஆரம்பிக்கப்படவுள்ளது.இந்த வலைப்பதிவு ஊடாக உங்கள் அனைவரையும் சந்திப்பத்தில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.இப்படிக்கு தாய்மடி இயக்குணர்கள். இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது!! -மேதகு வே. பிரபாகரன்.