யாழ்ப்பாணத்திலும் வவுனியாவிலும் நடைபெறவுள்ள மாநகரசபை மற்றும் நகரசபை தேர்தல்கள், ஜனநாயகத்திற்கு வெகு தூரத்தில் உள்ளதாக ஐக்கிய தேசியக்கட்சி தெரிவித்துள்ளது. ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர், ஜயலத் ஜயவர்த்தன, இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.
தமது கட்சிக்கு இன்னும் இடம்பெயர்ந்துள்ள மக்களை சந்திப்பதற்கு வாய்ப்பு வழங்கப்படாத நிலையில், இந்த தேர்தல் எந்தளவு ஜனநாயகமாக இருக்கமுடியும், என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
அரசாங்கம், முதலில் எதிர்கட்சிக்கு வவுனியா செல்ல அனுமதி வழங்கவேண்டும் என அவர் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களில் இருந்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் இலங்கை வெற்றி பெற்றமை குறித்து அவர் ஐக்கிய தேசியக்கட்சியின் மகிழ்ச்சியை வெளியிட்டார்.
எனினும் இலங்கை அரசாங்கம், சபையில் எதிராக வாக்களித்த நாடுகளுடன் சுமுக பேச்சுவார்த்தைகளை நடத்தவேண்டும் என அவர் கோரியுள்ளார்.
பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் வெற்றிப்பெற்ற அரசாங்கம், சமாதான முனைப்புக்கு முன்னிலை தரவேண்டும் என்றும் ஜயலத் ஜயவர்த்தன குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment