மட்டக்களப்பு நகரில் கடந்த புதன்கிழமை 12 இளைஞர்கள் சிவிலுடை தரித்த பொலிஸாரினால் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். தலைவர் பிரபாகரன் தொடர்பான செய்திகள் நாளுக்குநாள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலயில் மட்டக்களப்பு மக்கள் இச்செய்திகளை அறிய பெரிதும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
மட்டக்களப்பு நகரில் அமைந்தள்ள நெட்கபேக்களில் பெருமளவான மக்கள் கூட்டம் அலைமேதியதைக் காணக்கூடியதாகவிருந்தது. அரசாங்கத்தின் பொய்ச் செய்திகளை நம்பாத பெருமளவான இளைஞர்கள் இணையத்தளங்களுடாக தலைவர் பிரபாகரன் தொடர்பான செய்திகளையும், காணொளி படங்களையும் அறிய ஆவலுடன் முண்டியடித்து வந்தனர்.
இந்நிலையில் கடந்த புதன்கிழமை நண்பகலளவில் நகரிலுள்ள சில நெட்கபே நிலையங்களுக்குள் திடீரென சிவிலுடையில் வந்த சிலர் அங்கு இணையத்தளங்களில் கூட்டமாக பார்வையிட்டுக் கொண்டிருந்த 12 இளைஞர்களை பலவந்தமாக தமது ஜீப்பில் ஏற்றிக் கொண்டுசென்றதாக நேரில் பார்த்த மக்கள் தெரிவித்துள்ளனர்.
போலிஸாரின் நில நிற ஜீப்பொன்றில் சிவிலுடையில் வந்த சிலர் தாம் பொலிஸ் எனக்கூறியே இவ்விளைஞர்களைக் கொண்டுசென்றதாகவும். நேட்கபெ நடத்துனர்கள் சிலரும் இவர்களால் தாக்கப்பட்டதாகவும் நெட்கபே நடத்துனர் ஒருவர் தெரிவித்துள்ளார். ஆனால் கொண்டுசெல்லப்பட்ட 12 இளைஞர்களும் மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்திலோ அல்லது மட்டக்களப்பு சிறைச்சாலையிலோ இதுவரை கொண்டுவரப் படவில்லையென பொலிஸ்நிலைய வட்டாரங்களை மேற்கோள் காட்டிய தகவலொன்று தெரிவிக்கின்றது.
இதனால் மட்டக்களப்பு மக்கள் பீதியும் கலக்கமும் அடைந்துள்ளனர். இதற்கும் மேலாக மட்டக்களப்பிலிருந்து வெளிச்செல்லுகின்ற அனைத்து கம்பிவழி தொலை பெசிகளும் இராணுவ புலனாய்வுப்பிரிவினரால் ஒட்டுக்கேட்கப்படுவதாக தகவலொன்று தெரிவிக்கின்றது. அத்துடன் மாலை 7 மணிக்குபின் இளைஞர்கள் வீதிகளில் திரிந்தால் சுட்டுக்கொல்லப்படுவார்களென கடந்த சில வாரங்களுக்கு முன்பு மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் எடிசன் குணதிலக உத்தரவிட்டுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment