Saturday, May 23, 2009

ஈழத் தமிழர்களின் பிரச்னைகள் என்னவென்று கண்டறித்து அவற்றை சிறிலங்கா அரசு தீர்க்க வேண்டும் - இந்தியாவின் புதிய வெளியுறவுத் துறை அமைச்சர்

ஈழத் தமிழர்களின் பிரச்னைகள் என்னவென்று கண்டறித்து அவற்றை சிறிலங்கா அரசு தீர்க்க வேண்டும் என்று இந்தியாவின் புதிய வெளியுறவுத் துறை அமைச்சராக பொறுப்பேற்கவுள்ள முன்னாள் கர்நாடக முதல்வர் எஸ்.எம். கிருஷ்ணா வலியுறுத்தியுள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இலங்கையில் எந்தக் காரணத்தால் தமிழர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதையும், அவர்களின் பிரச்னைகளின் மூல காரணம் என்ன என்பதையும் கண்டறித்து தீர்க்க வேண்டும்.

அந்நாட்டின் அரசியல் சாசனத்துக்கு உள்பட்டு அனைத்து தரப்பு மக்களுக்கும் சமஉரிமை அளிக்க வேண்டும். இலங்கை தங்கள் நாடு என்ற உணர்வு அங்குள்ள தமிழர்களுக்கு ஏற்படும் வகையில் அரசு செயல்பட வேண்டும் என்று இந்தியா வலியுறுத்துகிறது.

போரினால் இடம் பெயர்ந்துள்ள தமிழர்கள் தங்கள் இருப்பிடங்களுக்குச் சென்று அமைதியாக வாழ நடவடிக்கை எடுக்க வேண்டும். அண்டை நாடுகளுடன் அமைதியான நட்புறவையே இந்தியா விரும்புகிறது என்றார்.


No comments:

Post a Comment

***!!!!!!!!!!அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!!!!!!***

எமது அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!எமது இணயத்தளம் மிக விரைவில் ஆரம்பிக்க இருக்கின்றது என்பதை அறியத் தருகின்றோம்.பல இன்னல்களையும் தாண்டி இறுதி இலக்கை நோக்கி ஆரம்பிக்கப்படவுள்ளது.இந்த வலைப்பதிவு ஊடாக உங்கள் அனைவரையும் சந்திப்பத்தில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.இப்படிக்கு தாய்மடி இயக்குணர்கள். இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது!! -மேதகு வே. பிரபாகரன்.