Saturday, May 23, 2009

சிறிலங்காவிற்கான இந்திய தூதுவராக தமிழர் ஒருவரை நியமிக்க வலியுறுத்தல்

சிறிலங்கா நாட்டிற்கான இந்திய தூதுவராக தமிழர் ஒருவரை உடனடியாக நியமிக்க வேண்டும் என்று ஈழத்தமிழர் வாழ்வுரிமை மீட்பு இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

ஈழத் தமிழர் வாழ்வுரிமை மீட்பு இயக்கத்தின் கூட்டம் சென்னை பெரியார் திடலில் நடந்தது. கூட்டத்திற்கு, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தலைமை தாங்கினார். இதில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன், பேராசிரியர் சுப.வீரபாண்டியன், பொன்.குமார், கவிஞர் மு.மேத்தா ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், ஈழத்தமிழர்களை காப்போம் என்னும் பெயரில் 1ம் திகதி சென்னை சைதாப்பேட்டை, 7 ம் திகதி திருச்சி, 13ம் திகதி மதுரையில் பொதுக்கூட்டம் பேரணி நடத்துவது.

இலங்கையில் உணவு, மருந்து இன்றி போராடி கொண்டிருக்கும் தமிழ் மக்களுக்கு செஞ்சிலுவை சங்கம் மூலம் உதவிகள் செய்ய வேண்டும். ராஜபக்சேயை போர் குற்றவாளியாக உலக நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும்.

தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளடக்கிய குழு ஒன்றை இலங்கைக்கு அனுப்பி உண்மைகளை கண்டறிய இந்திய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்.

சிறிலங்காவிற்கான இந்திய தூதுவராக தமிழர் ஒருவரை உடனடியாக நியமிக்க வேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

No comments:

Post a Comment

***!!!!!!!!!!அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!!!!!!***

எமது அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!எமது இணயத்தளம் மிக விரைவில் ஆரம்பிக்க இருக்கின்றது என்பதை அறியத் தருகின்றோம்.பல இன்னல்களையும் தாண்டி இறுதி இலக்கை நோக்கி ஆரம்பிக்கப்படவுள்ளது.இந்த வலைப்பதிவு ஊடாக உங்கள் அனைவரையும் சந்திப்பத்தில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.இப்படிக்கு தாய்மடி இயக்குணர்கள். இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது!! -மேதகு வே. பிரபாகரன்.