Saturday, May 23, 2009

ஜனாதிபதி இன்னும் 25 ஆண்டுகளுக்கு நாட்டை ஆட்சி செய்ய வேண்டும்: மல்வத்த பீடாதிபதி


ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்னும் 25 ஆண்டுகளுக்கு நாட்டை ஆட்சி செய்ய வேண்டுமென கண்டி மல்வத்த பீட மாநாயக்க தேரரான திப்பட்டுவாவே சுமங்கல தேரர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் நல்லாட்சியை முன்னெடுக்க பௌத்த பிக்குமார் பூரண ஆதரவளிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
கண்டி தலதா மாளிகையில் ஜனாதிபதிக்கு அளிக்கப்பட்ட விசேட கௌரவிப்பு நிகழ்வில் கலந்து கொண்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

நாட்டிற்கு அளப்பரிய சேவையாற்றும் மன்னர்களுக்கு பௌத்த பிக்குகளினால் வழங்கப்படும் கௌரவ “விஷ்வகீர்த்தி ஸ்ரீ லங்காதீஸ்வர” பட்டம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ளது.
 
முன்னைய ஆட்சியாளர்கள் கொழும்பிலிருந்து கொண்டு யுத்தத்தை முன்னெடுத்த போதிலும், ஜனாதிபதி நேரடியாக களத்தில் இறங்கி போராட்டங்களை கண்காணித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
இந்த நாட்டில் உருவான மிகச் சிறந்த மக்கள் தலைவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே என அவர் புகழாரம் சூட்டியுள்ளார்.

No comments:

Post a Comment

***!!!!!!!!!!அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!!!!!!***

எமது அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!எமது இணயத்தளம் மிக விரைவில் ஆரம்பிக்க இருக்கின்றது என்பதை அறியத் தருகின்றோம்.பல இன்னல்களையும் தாண்டி இறுதி இலக்கை நோக்கி ஆரம்பிக்கப்படவுள்ளது.இந்த வலைப்பதிவு ஊடாக உங்கள் அனைவரையும் சந்திப்பத்தில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.இப்படிக்கு தாய்மடி இயக்குணர்கள். இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது!! -மேதகு வே. பிரபாகரன்.