Friday, May 8, 2009

பிணந்தின்னிக் கழுகுகளின் அரசாக மாறும் சொர்க்கம் - ரெலிகிராப்ற்காக றிச்சார்ட் டிக்ஸன்


சர்வதேசம் இதற்கு எவ்வாறு எதிர்வினையாற்றுகிறது? இறந்து கொண்டிருக்கும் சிறுவர்களினதும், பெண்களினதும் அழுகையொலி வானை முட்டுகிறது. ஆனாலும் மனிதர்களால் உருவாக்கப்பட்ட இந்த மாபெரும் அழிவைத் தடுத்து நிறுத்தக் கூடிய ஆற்றலுள்ளவர்களின் இதயங்களை இந்தக் குரல்கள் எட்டவேயில்லை. வடமுனையில் காயமடைந்த ஒருவரை நிமிடத்திற்குள் சென்றடையக் கூடிய தொழில்நுட்பம் எங்களிடம் உள்ளது. நாங்கள் ஏவுகணைகளையும், விண்வெளிக் கூடங்களையும் நிறுவியுள்ளோம். ஆனால் அப்பாவிச் சிறுவர்களுடையதும் பெண்களதும் உயிர்களைப் பாதுகாப்பதில் நாங்கள் துயர்தரும் வகையில் தோல்வியடைந்திருக்கிறோம். அதுவும் எங்கேயென்றால் உலகிலேயே சிறந்த ஜனநாயக நாடு என்று தன்னைத்தானே சொல்லிக் கொள்ளும் நாட்டின் நகரத்திலிருந்து 20 மைல் தொலைவிலுள்ள மக்களின் உயிர்களைப் பாதுகாப்பதில் நாங்கள் தோல்வியடைந்திருக்கிறோம்.

ருவண்டாவிலும், கொசோவாவிலும் நடைபெற்றவைகளைப் போன்ற சம்பவங்கள் அவர்களுடைய தொலைக்காட்சியில் மீளவும் காட்டப்பட்டுக் கொண்டிருக்கின்றன. தொல்லைகளுக்குள்ளான இந்தத் தீவில் சமாதானத்தை ஏற்படுத்துவதில் சுதந்திரமான தேசங்களின் தலைவர்கள் இதுவரை தோல்வியடைந்துள்ளார்கள்.

ஏன் இலங்கையில் தமிழர்களை அவர்கள் கொல்கிறார்கள்?

மோசடி, முட்டாள்தனம், புறக்கணிப்பு, அகங்காரம், வெறுப்புணர்வு, அகம்பாவம், பேராசை இவ்வளவு பேய்களும் ஒன்றாக இணைந்து மக்களை மனிதத்தன்மையற்றவர்களாக மாற்றி விடுகிறது. சிங்கள பௌத்த தீவிரவாதிகள் இந்தச் சிறிய தீவிலிருந்து தமிழர்களைத் துடைத்தழித்து விட விரும்புகிறார்கள். அந்தவகையில் பல்லாயிரக்கணக்கான தமிழர்களைக் கொன்றொழிப்பதில் அவர்கள் வெற்றியும் பெற்றுள்ளார்கள். ஹிட்லர் மில்லியன் கணக்கான யூதர்களைக் கொன்றொழித்தான். ஏனென்றால் அவர்கள் தங்களிலிருந்து வேறுபட்டிருந்தார்களென்கிற ஒரு சிறிய காரணத்திற்காக. அதேவழியிலேயே சிங்கள பௌத்த தீவிரவாதிகள் 60 வருடங்களுக்கு மேலாக தமிழர்களை அடக்கி ஒடுக்குவதற்கு இலங்கை அரசு ஆதரவளிக்கிறது. மற்றவர்கள் மீது வெறுப்பை ஏற்படுத்துவதற்கு முஸ்லிம் தீவிரவாதிகள் குர்ஆனை பயன்படுத்துகிறார்கள். இலங்கையிலுள்ள சிங்களவர்கள் தங்களுடைய புனித நூல் என்று சொல்லப்படுகின்ற மகாவம்சத்திலுள்ள சர்ச்சைக்குரிய எழுத்துக்களை தமிழர்களுக்கு எதிரான வெறுப்பை உமிழ்வதற்கு பயன்படுத்துகிறார்கள். சிங்கள இளைஞர்களுக்கு அவர்களது பாடசாலைகளில் மோசடியும் பொய்யும் நிறைந்த வரலாறு போதிக்கப்படுகிறது.

இந்த மகாவம்சம் இலங்கையில் மட்டுமே பாவிக்கப்படுகிறது. வேறு நாடுகளில் இருக்கும் பௌத்தர்களால் இது பாவிக்கப்படுவதில்லை. திபெத்தின் தலாய்லாமாவினால் போதிக்கப்படுவது போன்ற அமைதியானதல்ல இலங்கையில் இருக்கும் பௌத்த போதனைகள். இலங்கையின் முன்னாள் பிரதம மந்திரிகளில் ஒருவர் ஆயுதம் தாங்கிய பிக்கு ஒருவரினால் படுகொலை செய்யப்பட்டார். 50களிலும், 60களிலும், 70களிலும் சிங்களத் தீவிரவாதிகள் கத்தியையும், வாட்களையும் கொண்டு ஆயிரக்கணக்கான தமிழர்களை வெட்டிச் சாய்த்தார்கள். அவர்கள் வீடுகளை அடித்துடைத்ததோடு நெருப்பும் வைத்தார்கள். ஆயிரக்கணக்கான தமிழர்கள் வீடுகளை இழந்தார்கள். வீடுகளை இழந்தவர்கள் இலங்கையின் வடபகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள். இப்போது அவர்கள் கிளஸ்டர் குண்டுகள், பொஸ்பரஸ் குண்டுகள் மூலம் தமிழர்களைக் கொல்கிறார்கள். அவர்கள் வைத்தியசாலைகள் மீதும், பாடசாலைகள் மீதும், அகதி முகாம்கள் மீதும் குண்டுகளை வீசுகிறார்கள்.

எல்லாச் சிங்கள மக்களும் இனவாதிகள் தானா?

அமைதியை விரும்பும் சிங்கள மக்கள் ஏராளமானவர்கள் இலங்கையில் இருக்கின்றார்கள். தமிழ் மக்களுடைய விடுதலைக்கான போருக்கு சிங்கள சமூகத்தில் இருக்கும் பல கல்வியாளர்கள் மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள், கிறிஸ்தவ மதகுருமார்கள், தொழிற்தகமையாளர் கள் போன்றோர் ஆதரவளிக்கிறார்கள். சில தமிழர்கள் சிங்களவர்களை மணம் புரிந்துமுள்ளார்கள்.

அவ்வகையில் சிங்களவர்களிடையே இருக்கும் தீவிரவாதிகள் மிகச் சிறுபான்மையினரே. இவர்கள் அரசியல்வாதிகளிலும், இராணுவத் தலைவர்களிலும், சாதாரண சிங்கள மக்களிலும் பெருஞ் செல்வாக்குச் செலுத்துகிறார்கள். இனவாத வெறுப்பையும் வன்முறையையும் பாரபட்சத்தையும் இவர்கள் தூண்டி விடுகிறார்கள். பௌத்த தீவிரவாதம் அதன் எல்லையைக் கடந்து சென்று விட்டது. ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் இவர்களினால் கொல்லப்பட்டு விட்டார்கள். ஆறு இலட்சம் தமிழர்கள் வீடிழந்து முகாம்களில் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளார்கள். 50 ஆயிரம் பேர் விதவைகளாக உள்ளார்கள். இன்னும் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் அங்கவீனர்களாகவும், சித்த சுவாதீனமுற்றவர்களாகவும் ஆகியுள்ளார்கள். பெரும்பான்மை சிங்களவர்கள் தமிழர்களுக்கெதிரான இந்தப் போருக்கு ஆதரவளிக்கிறார்கள். அவர்கள் இனவாத அரசியலுடன் வரும் அரசியல்வாதிகளைத் தெரிவு செய்கிறார்கள்.

அப்பாவித் தமிழர்களுக்கெதிரான படுகொலைக்கு இலங்கை அரசுக்கு உடந்தையாக இருப்பவர்கள் யார்?

ஆயுதங்கள் மற்றும் இராணுவ உபகரணங்களைச் சீனாவும், பாகிஸ்தானும் வழங்குகின்றன. ஈரானும், லிபியாவும் ஆயுதம் வாங்குவதற்கு குறைந்த வட்டியுடனான கடனை வழங்குகின்றன. இந்தியா புலனாய்வு மற்றும் இராணுவத் திறமைகளை இலங்கைக்கு வழங்கி ஒத்தூதுகின்றது.

அவர்கள் என்ன செய்கிறார்கள்? ஏன் அவர்கள் அப்படிச் செய்கிறார்கள்?

எல்லா நாடுகளும் இலங்கையின் இந்த இனவாத அரசைத் திருப்திப்படுத்துவதிலேயே குறியாக இருக்கின்றன. ஏனெனில் இப்பிராந்தியத்தில் அவர்களுடைய நலன்களை நிறுவுவது என்ற தந்திரோபாயத்தின் அடிப்படையில். சீனா குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க முயல்கிறது. கத்தியாலும், வாளாலும் நூற்றுக்கணக்கான தமிழர்களை மட்டுமே கொல்ல முடியுமென்பதால் ஆயிரக்கணக்கில் தமிழர்களைக் கொல்வதற்கு சிங்களத் தீவிரவாதிகளுக்கு சிறந்த ஆயுதங்கள் தேவைப்படுகின்றன. அவர்கள் இந்தியாவிடம் சென்று ஆயுதங்கள் கேட்டார்கள். இந்தியா மறுத்தது. அவர்கள் கிழக்கிற்கும் மேற்கிற்கும் சென்றார்கள். ஒருவரும் இலங்கைக்கு ஆயுதம் தரச் சம்மதிக்கவில்லை. இரண்டு நாடுகள் முன்வந்தன. அவை சீனாவும், பாகிஸ்தானும். அவை வெளிப்படையாகவே அதற்குப் பதிலாக வேறு சிலவற்றைக் கேட்டன.

இதேவேளை சீனா இலங்கையுட்பட தென்கிழக்காசிய நாடுகளில் துறைமுகங்களைக் கட்டுவதில் சுறுசுறுப்பாகச் செயற்பட்டது. இலங்கையின் தென்பாகத்தில் துறைமுகக் கட்டுமானத்திற்கு ஒரு பில்லியன் டொலர்களைச் சீனா செலவிட்டது.

சீனாவிற்கான சவூதி அரேபியாவின் எண்ணெய் விநியோகத்தை பாதுகாப்பதும், இந்து சமுத்திரப்பிராந்தியத்தில் ரோந்தில் ஈடுபடும் தனது கடற்படைக் கப்பல்களுக்கு எண்ணெய் நிரப்புவதற்கும், தனது கடற்படைக் கப்பல்களைப் பழுது பார்ப்பதற்கும் இந்தத் துறைமுகத்தைப் பயன்படுத்துவதற்கு சீனா தீர்மானித்தது.

மார்ச் 2007இல் இலங்கை இந்தத் திட்டத்தை ஏற்றுக் கொண்டதும் சீனா எல்லாவகையான உதவிகளையும் வழங்கியது. மேற்கு நாடுகள் பற்றிய எந்தக் கவலையும் இல்லாமல் தமிழர்களைத் தோற்கடிப்பதற்குத் தேவையான ஆயுதங்கள், இராஜதந்திர உதவிகள் எல்லாவற்றையும் வழங்கியது.

சீனா இதுவரை ஆறு எப்.7 ஜெற் போர் விமானங்களை இலவசமாக வழங்கியுள்ளது. இந்தத் தகவலை ஸ்ரொக் கோல்ம் சர்வதேச சமாதான ஆய்வு நிறுவனம் வெளியிட்டிருக்கிறது.

பாகிஸ்தானும் இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் தனது மேலாதிக்கத்தை விரிவடையச் செய்ய விரும்பியது. அந்தவகையில் அண்மைக்காலத்தில் தன்னியக்கத்துப்பாக்கிகள், மோட்டார்கள், பல்குழல் ஏவுகணைகள், ஆட்லறிகள், டாங்கிகள் போன்றவற்றை வழங்கியிருந்தார்கள்.

No comments:

Post a Comment

***!!!!!!!!!!அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!!!!!!***

எமது அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!எமது இணயத்தளம் மிக விரைவில் ஆரம்பிக்க இருக்கின்றது என்பதை அறியத் தருகின்றோம்.பல இன்னல்களையும் தாண்டி இறுதி இலக்கை நோக்கி ஆரம்பிக்கப்படவுள்ளது.இந்த வலைப்பதிவு ஊடாக உங்கள் அனைவரையும் சந்திப்பத்தில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.இப்படிக்கு தாய்மடி இயக்குணர்கள். இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது!! -மேதகு வே. பிரபாகரன்.