Monday, May 25, 2009

விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தை அரசாங்கம் தனியாகவே மேற்கொண்டது – பாலித கொஹனே


தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான இலங்கை அரசாங்கம் தனியாகவே முன்னெடுத்ததாக வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பாலித கொஹனே தெரிவித்துள்ளார்.
உலக நாடுகளினால் பிரயோகிக்கப்பட்ட கடுமையான அழுத்தங்கள் பொருட்படுத்தாது எடுக்கப்பட்ட கடுமையான தீர்மானங்களின் காரணமாக பயங்கரவாதத்தை முற்றாக இல்லாதொழிக்க முடிந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். 

முன்னாள் போர்நிறுத்தக் கண்காணிப்புக்குழுவின் தலைவர் ஜெனரல் ஹென்ரிக்சன் அரசாங்க உயரதிகாரிகள் உள்ளிட்ட பலர் புலிகளுடனான யுத்தத்தில் வெற்றியீட்ட முடியாதென தெரிவித்திருந்தனர். 

எவ்வாறெனினும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையின் கீழ் சரியான முறையில் படையினர் வழிநடத்தப்பட்டதனால் இந்த மாபெரும் வெற்றி கிடைக்கப் பெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment

***!!!!!!!!!!அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!!!!!!***

எமது அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!எமது இணயத்தளம் மிக விரைவில் ஆரம்பிக்க இருக்கின்றது என்பதை அறியத் தருகின்றோம்.பல இன்னல்களையும் தாண்டி இறுதி இலக்கை நோக்கி ஆரம்பிக்கப்படவுள்ளது.இந்த வலைப்பதிவு ஊடாக உங்கள் அனைவரையும் சந்திப்பத்தில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.இப்படிக்கு தாய்மடி இயக்குணர்கள். இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது!! -மேதகு வே. பிரபாகரன்.