Monday, May 25, 2009

வடக்கில் சாதாரணதர புலமைப் பரிசில் பரீட்சைகள் பிற்போடப்பட்டுள்ளன

வடக்கின் நான்கு மாவட்டங்களில் கல்விப் பொதுத் தராதர சாதாரணதர மற்றும் புலமைப் பரிசில் பரீட்சைகள் பிற்போடப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கிளிநொச்சி முல்லைத்தீவு வவுனியா மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 17000 மாணவர்களுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சகளை நான்கு மாதங்களினால் பிற்போட பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது. 

எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெவுள்ள ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைகள் எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 

கிளிநொச்சி முல்லைத்தீவு மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களில் பரீட்சைகளை நடத்தக் கூடிய சூழ்நிலை நிலவவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. 

மேலும் வவுனியா மாவட்டத்தில் உள்ள பல பாடசாலைகள் இடைத்தங்கல் முகாம்களாக பயன்படுத்தப்பட்டு வருகின்ற காரணத்தினால் பரீட்சைகளை நடத்த மடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 

கடந்த காலங்களில் நிலவிய யுத்த சூழ்நிலையினால் வன்னி மாணவர்கள் கடந்த எட்டு ஒன்பது மாதங்களாக கல்வி கற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதெனத் தெரிவிக்கப்படுகிறது. 

சகல மாணவர்களுக்கும் சம சந்தர்ப்பம் அளிக்கும் நோக்கில் அரசாங்கம் இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் அனுர எதிரிசிங்க குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

***!!!!!!!!!!அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!!!!!!***

எமது அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!எமது இணயத்தளம் மிக விரைவில் ஆரம்பிக்க இருக்கின்றது என்பதை அறியத் தருகின்றோம்.பல இன்னல்களையும் தாண்டி இறுதி இலக்கை நோக்கி ஆரம்பிக்கப்படவுள்ளது.இந்த வலைப்பதிவு ஊடாக உங்கள் அனைவரையும் சந்திப்பத்தில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.இப்படிக்கு தாய்மடி இயக்குணர்கள். இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது!! -மேதகு வே. பிரபாகரன்.