![]() |
காலத்திற்கு காலம் அவசரகாலச் சட்டங்கள் தளர்த்தப்பட்ட போதிலும் கடந்த 1980ம் ஆண்டு முதல் இலங்கையில் அவசரகாலச் சட்டம் அமுல்படுத்தப்பட்டு வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தற்போதைய நிலைமைகளை கருத்திற் கொண்டதன் பின்னர் இந்த கோரிக்கையை விடுக்க கட்சித் தலைவர்கள் தீர்மானித்துள்ளதாக உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நாட்டிலிருந்து பயங்கரவாதம் முற்றாக இல்லாதொழிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த சட்டங்களில் தளர்வினை ஏற்படுத்துவில் சிக்கல் இருக்காதென கட்சிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளன. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மக்கள் பிரிவு, ஜனநாயக மக்கள் முன்னணி, ஐக்கிய சோசலிச கட்சி மற்றும் புதிய இடதுசாரி முன்னணி ஆகிய கட்சிகள் இணைந்து இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளன. மேலும், இடம்பெயர் மக்களை உடனடியாக குடியமர்த்த வேண்டுமென மேலும் கோரிக்கை விடுத்துள்ளன. மீன்பிடித்தலுக்கு விதிக்கப்பட்டுள்ள தடைகளையும் தளர்த்த வேண்டுமென கோரிக்கை விடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. எவ்வாறெனினும், இடம்பெயர் மக்களை மீளக் குடியமர்த்துதல் மற்றும் நாட்டில் ஜனநாயகத்தை மீள நிலைநிறுத்தல் என்பனவே நாட்டின் தற்போதைய மிக முக்கியமான தேவைகள் என எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன. |
Monday, May 25, 2009
அவசரகாலச் சட்டத்தை அகற்றுமாறு எதிர்க்கட்சிகள் கூட்டாக கோரிக்கை
Subscribe to:
Post Comments (Atom)
***!!!!!!!!!!அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!!!!!!***
எமது அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!எமது இணயத்தளம் மிக விரைவில் ஆரம்பிக்க இருக்கின்றது என்பதை அறியத் தருகின்றோம்.பல இன்னல்களையும் தாண்டி இறுதி இலக்கை நோக்கி ஆரம்பிக்கப்படவுள்ளது.இந்த வலைப்பதிவு ஊடாக உங்கள் அனைவரையும் சந்திப்பத்தில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.இப்படிக்கு தாய்மடி இயக்குணர்கள்.
இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது!! -மேதகு வே. பிரபாகரன்.
No comments:
Post a Comment