இடைத்தங்கல் முகாம்களில் தங்கியிருக்கும் அப்பாவி பொதுமக்களை மீளக் குடியமர்த்த அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ளத் தவறினால் பாரிய பிரச்சினைகள் உருவாகும் என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார். |
அத்துடன் நாட்டில் தேசிய சமாதானத்தை கட்டியெழுப்ப அரசாங்கத்திற்கு பூரண ஆதரவளிக்கப்படும் எனவும் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சிக்கும், அரசாங்கத்திற்கும் இடையில் முரண்பாடுகள் காணப்பட்டாலும் தேசத்தை கட்டியெழுப்பும் முயற்சியில் ஒன்றிணைந்து செயற்படத் தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார். யுத்தம் நிறைவடைந்துள்ள நிலையில் சகல மக்களையும் ஒன்றிணைத்து வடக்கில் இடம்பெயர் மக்களுக்கு நிவாரணங்களை அளிக்க வேண்டியது அரசியல் கட்சிகளின் முக்கிய கடமையாகும் என அவர் தெரிவித்துள்ளார். தேசிய சமாதானத்தை கட்டியெழுப்ப பாடுபட வேண்டிய இந்த தருணத்தில் அரசாங்கம் ஐக்கிய தேசியக் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்கு எதிரான பிரச்சாரங்களை மேற்கொண்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். |
Monday, May 25, 2009
முகாம்களில் தங்கியிருக்கும் மக்களை மீளக் குடியமர்த்த அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ள தவறினால் பிரச்சினைகள் உருவாகும்: ரணில் எச்சரிக்கை
Subscribe to:
Post Comments (Atom)
***!!!!!!!!!!அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!!!!!!***
எமது அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!எமது இணயத்தளம் மிக விரைவில் ஆரம்பிக்க இருக்கின்றது என்பதை அறியத் தருகின்றோம்.பல இன்னல்களையும் தாண்டி இறுதி இலக்கை நோக்கி ஆரம்பிக்கப்படவுள்ளது.இந்த வலைப்பதிவு ஊடாக உங்கள் அனைவரையும் சந்திப்பத்தில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.இப்படிக்கு தாய்மடி இயக்குணர்கள்.
இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது!! -மேதகு வே. பிரபாகரன்.
No comments:
Post a Comment