![]() |
இலங்கையில் விடுதலைப்புலிகளை ஒழிப்பதாக கூறி சிங்கள இராணுவம் நடத்திய போரில் ஏராளமான அப்பாவி தமிழர்களை படுகொலை செய்வதற்கு ராடார், பீரங்கி மற்றும் பல ஆயுத உதவிகளை இந்தியா செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இலங்கைக்கு இந்தியா ஏராளமான உதவிகள் செய்து வருவதாக பாராளுமன்றத்திலும் அங்குள்ள மந்திரிகள் தெரிவித்தனர். இந்த சூழ்நிலையில், இலங்கைக்கு ஆயுத உதவி செய்ய இந்தியா மறுத்ததாக இராணுவ தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். இது குறித்து ஆங்கில செய்தி டி.வி. சனலுக்கு அவர் அளித்த பேட்டியில் தெரிவித்ததாவது:- கனரக ஆயுதங்களை இலங்கைக்கு விற்கவோ அல்லது அனுப்பவோ முடியாத சூழ்நிலையில் இருப்பதாக இந்தியா எங்களிடம் தெரிவித்தது. அடிப்படை தகவல் தொடர்புக்கு உதவும் ராடார் கருவிகளை வழங்க கூட மறுத்து விட்டது. எனவே எங்களுடைய ஆயுத தேவைகளுக்காக பாகிஸ்தான், சீனா, ரஷ்யா போன்ற நாடுகளை அணுகினோம். ஆனால், இலங்கை எதிர்பார்த்த அளவுக்கு இல்லாமல் குறைந்த அளவிலான ஆயுதங்களை வழங்க பாகிஸ்தான் முன்வந்தது. அதே ஆயுதங்களுக்கு ரஷ்யா, உக்ரைன் போன்ற நாடுகளில் அதிக விலை கூறினார்கள். அதே நேரத்தில் அதிக ஆயுதங்களை அளிக்க சீனா முன்வந்தது. ரஷ்யாவை ஒப்பிடும்போது பாதி விலையில் ஆயுதங்கள் கிடைத்ததால் நாங்கள் வேறு எந்த வாய்ப்பையும் நாடவில்லை. இவ்வாறு தெரிவித்தார்.
|
Monday, May 25, 2009
இலங்கைக்கு ஆயுத உதவி செய்ய இந்தியா மறுத்துவிட்டது என்கிறார் சரத் பொன்சேகா
Subscribe to:
Post Comments (Atom)
***!!!!!!!!!!அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!!!!!!***
எமது அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!எமது இணயத்தளம் மிக விரைவில் ஆரம்பிக்க இருக்கின்றது என்பதை அறியத் தருகின்றோம்.பல இன்னல்களையும் தாண்டி இறுதி இலக்கை நோக்கி ஆரம்பிக்கப்படவுள்ளது.இந்த வலைப்பதிவு ஊடாக உங்கள் அனைவரையும் சந்திப்பத்தில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.இப்படிக்கு தாய்மடி இயக்குணர்கள்.
இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது!! -மேதகு வே. பிரபாகரன்.
No comments:
Post a Comment