Monday, May 11, 2009

புலத்தின் தமிழ் ஊடகங்களுக்கு தாழ்மையான வேண்டுகோள்!!!!!

தயவு செய்து இந்த நேரத்தில் ஆவது உங்களின் துப்புக் கெட்ட நிகழ்ச்சிகள் எல்லாவற்றையும் நிறுத்தி விட்டு உலகம் பூராவும் உணர்வுகளுடன் கிளர்ந்து தெருவிலே திரண்டு நிற்கும் அந்த மக்களிற்கு துணையாக நேரடி நிகழ்வுகளை ஒலி ஒளி பரப்பில் உடனே சேர்த்துக் கொள்ளுங்கள்...........

மக்களின் பங்கெடுப்பிற்கு ஊடகங்களின் பங்களிப்பு மிக மிக முக்கியமான ஒன்று என்பதை புரியாமல் தமிழ் மக்களிற்கு என ஊடகம் நடத்துகிறீர்களே...... இதை நினைக்கும் போது உங்களிற்கே வெட்கமாய் இல்லை.......???????
அதனால் தயவு செய்து உங்கள் ஒலி ஒளி பரப்பில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்துங்கள்!!!
இல்லையேல் தமிழ் துரோகிகள் பட்டியலில் உங்களையும் சேர்த்துக் கொள்ளுங்கள்..........
நீங்கள் உங்கள் நிகழ்ச்சிகளில் மாற்றங்களை ஏற்படுத்தினால் உண்மையில் தெருவிலே மக்கள் வெள்ளம் நிறைவதை யாராலும் தடுக்க முடியாது.........

எனவே வரலாற்றுக் கடமையில் இருந்து தவறிப்போய் பாரிய வரலாற்றுத் தப்பை செய்ய துணை போகாதீர்கள்!

தெருவிலே நிற்கும் எல்லா உறவுகளும் குறிப்பாக தொலைக்காட்சிகளையே சாடுகிறார்கள். எனவே தொலைக் காட்சிகளே விரைந்து செயல்படுங்கள்.........

குறைந்தது இந்த 3 நாட்கள் என்றாலும் உங்கள் பங்களிப்பை செய்யுங்கள்!!

No comments:

Post a Comment

***!!!!!!!!!!அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!!!!!!***

எமது அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!எமது இணயத்தளம் மிக விரைவில் ஆரம்பிக்க இருக்கின்றது என்பதை அறியத் தருகின்றோம்.பல இன்னல்களையும் தாண்டி இறுதி இலக்கை நோக்கி ஆரம்பிக்கப்படவுள்ளது.இந்த வலைப்பதிவு ஊடாக உங்கள் அனைவரையும் சந்திப்பத்தில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.இப்படிக்கு தாய்மடி இயக்குணர்கள். இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது!! -மேதகு வே. பிரபாகரன்.