Monday, May 11, 2009

வன்னி நிலை தொடர்பாக அதிகாரபூர்வமற்ற முறையில் பாதுகாப்பு சபை ஆராய்ந்தது: ரஷ்யா, சீனா பங்கேற்கவில்லை

வன்னியில் உருவாகியிருக்கும் மனிதாபிமானப் பிரச்சினை தொடர்பாக ஐ.நா. பாதுகாப்புச் சபையில் அங்கம் வகிக்கும் பத்து நாடுகள் நேற்று திங்கட்கிழமை அதிகாரபூர்வமற்ற முறையில் நியூயார்க்கில் கூடி ஆராய்ந்துள்ளன.
பாதுகாப்புச் சபையில் இடம்பெற்றுள்ள பத்து நாடுகளுடன் பிரித்தானியாவும், பிரான்சும் இந்த சந்திப்பை நடத்தின. இதில் அரச சார்பற்ற உதவி நிறுவனங்களும் கலந்துகொண்டன.

சிறிலங்காவின் போர் முனைப்புக்களுக்குத் தொடர்ந்தும் ஆதரவை வழங்கிவரும் சீனா, ரஸ்யா என்பவற்றுடன் வியட்நாமும் இந்தச் சந்திப்பில் கலந்துகொள்ளாமல் தவிர்த்துக்கொண்டன.

இலங்கையில் நடைபெறுவது ஒரு உள்நாட்டுப் போர்தான் எனவும் அதனால் அமைதிக்கு எந்தவிதமான அச்சுறுத்தலும் இல்லை எனவும் கூறுகின்ற இந்த மூன்று நாடுகளும் அதனால் இலங்கை பிரச்சினை தொடர்பாக பாதுகாப்புச் சபையில் விவாதிக்கப்படத் தேவையில்லை எனவும் வலியுறுத்துகின்றன.

இந்தப் போரை சாட்சிகள் எதுவும் இல்லாமல் நடக்கின்ற ஒரு போர் என வர்ணிக்கும் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் டேவிட் மிலிபான்ட அது தொடர்பாக பாதுகாப்புச் சபையில் விவாதிக்கப்பட வேண்டியது அவசியம் என்றும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

***!!!!!!!!!!அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!!!!!!***

எமது அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!எமது இணயத்தளம் மிக விரைவில் ஆரம்பிக்க இருக்கின்றது என்பதை அறியத் தருகின்றோம்.பல இன்னல்களையும் தாண்டி இறுதி இலக்கை நோக்கி ஆரம்பிக்கப்படவுள்ளது.இந்த வலைப்பதிவு ஊடாக உங்கள் அனைவரையும் சந்திப்பத்தில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.இப்படிக்கு தாய்மடி இயக்குணர்கள். இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது!! -மேதகு வே. பிரபாகரன்.