ஐரோப்பிய நாடுகளுக்கான பயணத்தினை மேற்கொண்டு சிறிலங்காவின் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நேற்று திங்கட்கிழமை இரவு கொழும்பில் இருந்து புறப்பட்டுள்ளார்.
சிறிலங்காவின் தற்போதைய நிலைமை தொடர்பாக ஐரோப்பிய தலைவர்களுடன் அவர் பேச்சுக்களை நடத்துவார் என ஐக்கிய தேசியக் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
தற்போது உருவாகியிருக்கும் நிலைமைகள் தொடர்பாக ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களுடன் பேச்சுக்களை நடத்துவதுடன், இலங்கையில் ஜனநாயகத்தை நிலைநாட்டுவதும்தான் ரணில் மேற்கொண்டிருக்கும் இந்தப் பயணத்தின் பிரதான நோக்கமாக இருக்கும் எனவும் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
இதேவேளையில் சிறிலங்காவுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்பாக அனைத்துலக சமூகம் ஆராய்ந்து வரும் நிலையில், அதற்கான ஆலோசனைகளை வழங்குவதற்காக ஐரோப்பிய நாடுகளுக்கான இந்தப் பயணத்தை ரணில் விக்கிரமசிங்க மேற்கொண்டிருப்பதாக ஆளும் கட்சி வட்டாரங்கள் குற்றம் சாட்டியுள்ளன.
No comments:
Post a Comment