கடந்த காலங்களில் சர்வதேசப் பிரச்சி னைகள் தோன்றிய போது ஐ.நாவும் சர்வ தேச சமூகமும் எவ்வாறான நிவாரண நட வடிக்கைகளில் ஈடுபட்டனவோ அதே போன்ற நடவடிக்கைகளை பாரபட்சமற்ற முறையில் மேற்கொள்ள வேண்டும். என கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு தமழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச விவகாரங்களுக்குப் பொறுப் பான எஸ்.பத்மநாதன் நேற்றிரவு விடுத்த அறிக்கை ஒன்றில் கோரப்பட்டுள்ளது.
முல்லைத்தீவில் 24 மணி நேரத்தில் 2,000 அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். பொதுமக்களுக்கான பாதுகாப்பு வலயம் என வரையறுக்கப்பட்ட, மக்கள் அடர்த்தியாகவுள்ள ஒரு பகுதியில் சிறிலங்காவின் வானூர்திகள் நடத்திய குண்டு வீச்சுக்களிலும், எறிகணைத் தாக்குதல்களினாலும் போரில் சம்பந்தப்படாத இவர்கள் கொல்லப்பட்டிருப்பது அரச பயங்கரவாதமும் போர்க் குற்றமுமாகும்.
ஆபத்தான நிலைமையில் உள்ள பொதுமக்களைப் பாதுகாப்பதில் தமக்குள்ள பொறுப்புக்களில் இருந்து ஐக்கிய நாடுகள் சபையும் , அனைத்துலகமும் தவறிவிட்டன என தமிழ் மக்கள் அதிருப்தியடைந்திருக்கின்றனர்.
அண்மைய காலங்களில் இதுபோன்ற அனைத்துலகப் பிரச்சினைகள் உருவாகியபோது ஐ.நா.வும் அனைத்துலக சமூகமும் எவ்வாறுன நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபட்டனவோ அது போன்ற நடவடிக்கைகளைப் பாராபட்சமற்ற முறையில் மேற்கொள்ள வேண்டும் என்பதையே நாம் கேட்கின்றோம்என்று அந்த நீண்ட அறிக்கையில் கோரப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment