முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளிவாய்க்கால் பகுதியில் உள்ள தற்காலிக மருத்துவமனை மீது சிறிலங்கா படையினர் மீண்டும் இன்று காலை நடத்திய அகோர எறிகணைத் தாக்குதல்களில் பெருமளவிலான மக்கள் கொல்லப்பட்டும் காயமடைந்தும் உள்ளதாக தெரிவிக்கின்றார்.
'மக்கள் பாதுகாப்பு வலய'மான முள்ளிவாய்க்காலில் தற்காலிகமாக இயங்கிவந்த முல்லைத்தீவு பொதுமருத்துவமனை மீது இன்று செவ்வாய்க்கிழமை காலை 8:00 மணியளவில் சிறிலங்கா படையினர் எறிகணைத் தாக்குதல்களை அகோரமாக நடத்தியதாக தெரிவிக்கின்றார்.
மீட்புப் பணிகள் அங்கு நடைபெற்று வருவதனால் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை எதுவும் இதுவரை கிடைக்கப்பெறவில்லை.
கடந்த மே மாதம் 2 ஆம் நாளில் இந்த மருத்துவமனை மீது சிறிலங்கா படையினர் நடத்திய அகோர எறிகணைத் தாக்குதல்களில் நோயாளர்கள் உட்பட 64 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 87 பேர் காயமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment