Saturday, May 16, 2009

விடுதலைப்புலிகளை முற்றாக தோற்கடித்துவிட்டதாக இலங்கை ஜனாதிபதி கூறியுள்ளார்

26 வருட உள்நாட்டுப் போருக்குப் பின்னர் விடுதலைப்புலிகளை தமது இராணுவம் முற்றாக தோல்வியடையச் செய்துள்ளதாக இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் கூறியிருக்கிறார்.
ஜோர்தானுக்கு விஜயம் செய்துள்ள அவர், விடுதலைப்புலிகளின் காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கைகளில் இருந்து விடுதலைபெற்ற ஒரு நாட்டுக்கு தான் நாளை திரும்புவேன் என்று கூறியுள்ளார்.

முன்னதாக, பிபிசிக்கு செவ்வி வழங்கிய இலங்கை பாதுகாப்புச் செயலர் கோட்டாபாய ராஜபக்ஷ அவர்கள், இன்னமும் ஒரு சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பில் விடுதலைப்புலிகள் ஒடுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

அந்தப் பகுதியும் விரைவில் கைப்பற்றப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

விடுதலைப்புலிகள் தரப்பில் இருந்து எந்தவிதமான தகவல்களும் வரவில்லை.

ஆயிரக்கணக்கான மக்கள் இன்னமும் அந்த போர் பகுதியில் இருந்து வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள்.

இதற்கிடையே, போரினால் அகதியாகியுள்ள மக்களிடம் சென்று உதவுவதற்கு மனிதாபிமான நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்படாவிட்டால், அதன் பலனை எதிர்கொள்ள நேரிடும் என்று பிரிட்டிஷ் பிரதமர் கோர்டன் பிரவுண் எச்சரித்திருக்கிறார்.

No comments:

Post a Comment

***!!!!!!!!!!அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!!!!!!***

எமது அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!எமது இணயத்தளம் மிக விரைவில் ஆரம்பிக்க இருக்கின்றது என்பதை அறியத் தருகின்றோம்.பல இன்னல்களையும் தாண்டி இறுதி இலக்கை நோக்கி ஆரம்பிக்கப்படவுள்ளது.இந்த வலைப்பதிவு ஊடாக உங்கள் அனைவரையும் சந்திப்பத்தில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.இப்படிக்கு தாய்மடி இயக்குணர்கள். இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது!! -மேதகு வே. பிரபாகரன்.