நெதர்லாந்தில் டென்காக் நகரிலுள்ள சிறீலங்காத்தூதரகம் மீது ஒருகிழமைக்குள் இரண்டாவது தடவையாக மீண்டும் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.
ஏற்கனவே, 11.05.2009 அன்று நடந்ததாக்குதலில் தூதரகத்தின் கண்ணாடி, யன்னல்கள் சேதமடைந்திருந்தன. மீண்டும் கடந்த 15.05.09 அன்று வெள்ளிமாலை நடந்த தாக்குதலில் பெட்றோல் குண்டு பாவிக்கப்பட்டுள்ளதாகவும் இதன் சேதவிபரங்கள் கிடைக்கவில்லையெனவும் இணையத்தளச் செய்தியொன்று தெரிவிக்கின்றது.
தமது தூதரகவளாகத்தினதும் அங்கு வேலைபுரிபவர்களினதும் பாதுகாப்பை பலப்படுத்துமாறும் இத்தாக்குதலிற்கான விசாரணையை நடத்துமாறும் நெதர்லாந்துஅரசை சிறிலங்கா அரசு கேட்டுக்கொண்டுள்ளதாக இவ்இணையத்தளசெய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment