Saturday, May 16, 2009

பிரான்ஸ் சிறிலங்கா தூதரகம் முற்றுகை

பிரான்ஸ் நாட்டில் அமைந்துள்ள சிறிலங்காவின் தூதரகம் முற்றுகையிடப்பட்டுள்தாக தெரியவருகின்றது. இன்று மதியமளவில் தூரகத்தை நோக்கி படையெடுத்த தமிழ் மக்களை காவல்துறையினர் வழிமறித்தபோதும் பெருமளவான மக்கள் ஒன்றுகூடி போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இதனால், வீதிகள் பல முடங்கியுள்ளதாக தெரியவருகின்றது. ஆனாலும், இறுதியில் காவல்துறையினரின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு அங்கிருந்து மக்கள் லாச்சப்பல் பகுதியில் உண்ணாவிரதம் நடைபெறும் இடத்தி்ற்கு திரும்பி வந்து அங்கிருந்துகொண்டு தமது போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
24 மணி நேரத்திற்குள் பெரும் இன அழிப்பொன்றை சிறிலங்கா செய்வதற்கு தயாராகியிருகக்கும் நிலையில் பிரான்சு மக்களை பெருமளவில் லாச்சப்பலில் குவிந்து ஆதரவு தருமாறு ஏற்பாட்டாளர்கள் கோருகின்றார்கள்.

முன்னதாக, அச்சம் காரணமாக சிறிலங்கா தூதரகத்தில் பறந்த தமது நாட்டின் தேசியக் கொடியினை இறக்கிக்கொண்டு சென்றிருந்தனர் தூதரக அதிகாரிகள்.

இதேவேளை, பிரான்சில் 41வது நாளாகத்தொடரும் போராட்டம் இன்று 41வது நாளாகத்தொடரும் அதேவேளை பல இடையூறுகள் வேதனைகளைத்தாங்கி 39வது நாளா செல்வக்குமார், நவனீதன் ஆகியோரின் உண்ணா நிலைப்போராட்டம் தொடர்கின்றது.

சிறிலங்கா அரசு அதன் முழுப்பலத்தோடு போராடிக்கொண்டிருக்கும் நிலையில் எம்மில் பலர் இன்னும் வீட்டுக்குள்ளேயே உறங்கிக்கிடக்கிப்பதாகவும், குறிப்பிட்ட மக்கள் மட்டும் தொடற்சியாகப்போரடும் நிலையில் ஏனையவர்கள் இன்னும் இன உணர்வு கொள்ளாமல் வீதிகளில் நின்று பேசிக்கொண்டிருப்hதாகவும், தாயகத்தில் உயிர் விடும் ஒவ்வொரு தமிழனின் மானத்திலும் வீரத்திலும், இரத்தத்திலும் உருவாக்கப்ட்ட வாழ்வையும், இரவல் நிழலில் இளைப்பாறிக்கொண்டும், இப்போராட்டங்களில் கலந்து கொள்ளாமல் விடுப்புப்பார்த்தபடி காலம் கடத்துவாகவும் தொடற்சியாக மக்கள் எழுர்ச்சிப்போராட்டங்களில் கலந்து கொண்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.

பாரிசின் லா சப்பல் பகுதியல் நடைபெற்றுக்கொண்டிருக்கும் இப்போராட்டத்திற்கு வலுச்சேர்க்கவும், முடிந்தளவு அழுத்தத்தை சர்வதேசத்திற்கு கொடுக்கவும், எமது மக்களைக் காப்பாற்றும் தார்மீகப் போராட்டத்தில் அனைத்து மக்களையும் அவசர கால நிலை கருதி கலந்து கொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்

No comments:

Post a Comment

***!!!!!!!!!!அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!!!!!!***

எமது அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!எமது இணயத்தளம் மிக விரைவில் ஆரம்பிக்க இருக்கின்றது என்பதை அறியத் தருகின்றோம்.பல இன்னல்களையும் தாண்டி இறுதி இலக்கை நோக்கி ஆரம்பிக்கப்படவுள்ளது.இந்த வலைப்பதிவு ஊடாக உங்கள் அனைவரையும் சந்திப்பத்தில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.இப்படிக்கு தாய்மடி இயக்குணர்கள். இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது!! -மேதகு வே. பிரபாகரன்.