டென்மார்க்கின் தலைநகரில் அமைந்துள்ள சீனத் தூதரகத்திற்கு முன்பாக 14-05-2009 அன்று முற்பகல் 10 மணியளவில் டென்மார்க் வாழ் தமிழ்மக்கள் ஒன்றுகூடி, தாயத்தில் சிறிலங்கா அரசின் தமிழின அழிப்பிற்கு சீன அரசு ஆயுதங்களையும் உதவிகளையும் ஆதரவினையும் வழங்குவதைக் கண்டித்து மிகவும் ஆவேசத்துடன் கோசங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன் சீனத் தூதரகத்திடம் மகஜர் ஒன்றையும் கையளித்தனர். இதனைத்தொடர்ந்து இவர்கள் இந்தியத் தூதரகத்தை நோக்கி நடந்து சென்றனர். அங்கும் மக்கள் இந்திய அரசு தமிழின அழிப்பிற்கு துணைபோவதைக் கண்டித்து கோசங்களை எழுப்பியதுடன் மகஜர் ஒன்றையும் இந்தியத் தூதரகத்திடம் கையளித்தனர்.
அப்போது வெளியில் வந்து மகஜரைப் பெற்றுக்கொண்ட இந்தியத்தூதரக அதிகாரிகள் இந்தியா சிறிலங்கா அரசிற்கு எவ்வித உதவியும் செய்யவில்லை என்று பதிலளித்தனர்.
இதனைக் கேட்ட மக்கள் மிகவும் ஆவேசத்துடன் கற்கள், முட்டைகள், தக்காளிப்பழங்கள் போன்றவற்றால் இந்தியத்தூதரகத்தை நோக்கி எறிந்தனர். இதனால் தூதரகத்தின் கண்ணாடி உடைந்தது.
இதனைத்தொடர்ந்து அங்கு வந்த காவல்துறையினர் கண்ணீர்ப்புகை, தடியடி போன்றவற்றைப் பிரயோகித்து மக்களை அங்கிருந்து கலைத்தனர். அத்துடன் அவ்வார்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட நால்வரை கைதுசெய்து கொண்டுசென்றனர்


No comments:
Post a Comment