மனித உரிமை கண்காணிப்பகத்தின் அவசர கண்காணிப்பு மற்றும் ஆராய்ச்சி அதிகாரி அன்னா நீஸ்ரற் (Anna Neistat) சிறீலங்காவின் குடிவரவு குடியகல்யவு பிரிவின் கறுப்பு பட்டியலில் இடப்பட்டுள்ளார்.
அவர் சிறீலங்காவுக்குள் பிரவேசிக்க முடியாதவாறு இவ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் இவர் போலியான ஆவணங்களை பயன்படுத்தி சிறீலங்காவுக்குள் உட்பிரவேசிக்க முற்பட்டதாக கூறியே சிறீலங்காவின் குடிவரவு குடியகல்வு அதிகாரி அபயக்கோன் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.
ஆனால் முன்னர் இவ்வாறான சம்பவங்கள் எதுவும் நடந்ததாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் கருத்து வெளியிடவில்லை என்பதுடன் சிறீலங்காவின் ஊடகங்களும் இவ்வாறான எந்த தகவலையும் வெளியிடவில்லை.
வன்னியில் அப்பாவி தமிழ் மக்கள் மீது சிறீலங்கா அரசு மேற்கொள்ளும் யுத்தம் மற்றும் கொலை ஆயுதப்பிரயோகம் இதன் மூலம் இடம்பெயர்ந்து தடுப்பு முகாம்களில் வைக்கப்பட்டுள்ள மக்களை நடாத்தும் முறை என்பன பற்றி சர்வதேச மட்டத்தில் கருத்துக்கள் வெளிவரும் நிலையில் மனித உரிமை கண்காணிப்பக அதிகாரியின் பயணம் சிறீலங்காவின் தமிழ் அழிப்பை வெளிச்சம் போட்டுக் காட்டி விடும் என்னும் அச்சத்தில் அரசு இதை செய்துள்ளதாக தெரிய வருகின்றது.
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கொழும்பு சென்ற லண்டன் ரைம்ஸ் பத்திரிகையின் செய்தியாளர் ஜெரமியின் பெயரும் தமது கறுப்புப் பட்டியலில் இருப்பதாகத் தெரிவித்த கட்டுநாயக்க வானூர்தி நிலைய அதிகாரிகள், அவரை உடனடியாக நாட்டிருந்து திருப்பி அனுப்பியிருந்தமை நினைவூட்டத்தக்கது.
No comments:
Post a Comment