Friday, May 8, 2009

பாதுகாப்பு வலயப் பகுதியில் மாற்றம்: இலங்கை இராணுவம் அறிவிப்பு



இலங்கையின் வடக்கே பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்டிருந்த பகுதியில் இலங்கை அரசாங்கம் தற்போது மாற்றத்தை அறிவித்துள்ளது.
இதற்கு முன்பு வரையறுக்கப்பட்டிருந்த பாதுகாப்பு பிரதேசமானது தற்போதைய நிலைமைகளை கருத்தில் கொண்டு மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

அங்குள்ள பொதுமக்கள் அடர்த்தியாக இருக்கும் பிரதேசங்களை கருத்தில் கொண்டும் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக இராணுவம் கூறியுள்ளது.

தற்போதைய நிலையில் காரியமுல்லை வாய்க்கால் பகுதிக்கு தெற்கே இருக்கும் பிரதேசம், வெள்ளமுள்ளிவாய்க்கால் பகுதி உள்ளிட்ட நிலப்பகுதி புதிய பாதுகாப்பு வலையப்பகுதியாக வரையறுக்கப்பட்டுள்ளது.

இரண்டு கிலோமீட்டர் நீளமும் ஒன்றரை கிலோமீட்டர் அகலமும் கொண்ட இந்த பகுதியானது புதிய பாதுகாப்பு வலயப்பகுதியாக வரையறுக்கப்பட்டுள்ளது.

இதற்கு வெளியில் இருக்கும் பகுதிகளில் இராணுவம் தொடர்ந்தும் விடுதலைப்புலிகள் மீதான தங்களின் தாக்குதல்களை தொடரும் என்று இராணுவம் சார்பாகப் பேசவல்ல பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார்.

ஆறு சதுர கிலோமீட்டர் பிரதேசம் பாதுகாப்பு வலயமாக விளங்கிவந்த நிலை மாறி, தற்போது இரண்டரை சதுர கிலோமீட்டர் பகுதியாக இது குறைக்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால் இலங்கை இராணுவம் விடுதலை புலிகளுக்கு எதிராக மேற்கொண்டு வரும் பொய்ப் பிரச்சாரத்தின் ஒரு பகுதியே இந்த அறிவிப்பு என்று விடுதலைப் புலிகள் அரசியல்துறை பொறுப்பாளர் பா.நடேசன் கூறினார்.

No comments:

Post a Comment

***!!!!!!!!!!அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!!!!!!***

எமது அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!எமது இணயத்தளம் மிக விரைவில் ஆரம்பிக்க இருக்கின்றது என்பதை அறியத் தருகின்றோம்.பல இன்னல்களையும் தாண்டி இறுதி இலக்கை நோக்கி ஆரம்பிக்கப்படவுள்ளது.இந்த வலைப்பதிவு ஊடாக உங்கள் அனைவரையும் சந்திப்பத்தில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.இப்படிக்கு தாய்மடி இயக்குணர்கள். இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது!! -மேதகு வே. பிரபாகரன்.