இலங்கையில் தமிழர்கள் நேர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு முடிவு கொண்டுவர கனடா அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்களின் சுய-நிர்ணய உரிமைக்கு தாம் முழுமையான ஆதரவு தருவதாகவும் கூறி கனேடிய பிரதம மந்திரி ஸ்ரிபன் காப்பர் அவர்களுக்கு அறிக்கை ஒன்றை, கனேடிய புத்திஜீவிகள் அனுப்பியிருக்கிறார்கள். இவ்விடயம் புதன்கிழமை ரொரன்ரோவில் நடந்த ஊடகவியலாளர் மகாநாட்டில் தெரிவிக்கப்பட்டது.
கனடாவின் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையே தமிழ்மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு காணும் வழியைத் தடுப்பதாகவும், தமிழர்களின் போராட்டம் 60 வருடங்களாக தொடர்ந்துகொண்டிருந்தும் ஊடகங்கள் கடந்த 30 வருடங்களை மட்டுமே குறிபிபிடுவதாகவும் இவ் ஊடகமகாநாட்டில் குறிப்பிடப்பட்டது. முதல் 30 வருடங்கள் தமிழர்கள் அமைதிவழியே போராடிய போராட்டத்தை ஊடகங்கள் கதைப்பதில்லையென்றும், தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கு முக்கியத்துவம் கொடுத்தே இப்பிரச்சினைக்கு தீர்வுகாண வேண்டும் என்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.
கனேடிய பிரதம மந்திருக்கு அனுப்பிவைக்கப்பட்ட இவர்களின் அறிக்கையானது பல பல்கலைக்கழகங்களிலும் கல்விக்கூடங்களிலும் இருந்து வந்ந 125 கல்வி நிபுணர்களால்
No comments:
Post a Comment