Friday, May 8, 2009

டென்மார்க் தலைநகர் கொப்பன்காபனில் அமைந்துள்ள ஐநா முன்னால்....

டென்மார்க் தலைனகர் கொப்பன்காபனில் அமைந்துள்ள ஐனா அலுவலகத்தின் உலக உணவுத்திட்ட செயற்பாட்டுத் திணைக்களத்தின் முன்பாக மாபெரும் அறப்போராட்டமொன்று டென்மார்க் வாழ் தமிழ்மக்களால் அனைத்து நகரங்களிலும் இருந்துவந்து பாரிய அளவில் நடைமுறைப்படுத்தப்பட்டது. இப் போராட்டமானது ஈழத்தில் தமிழ்மக்கள் மீதான பட்டினிச்சாவை தடைசெய்யக் கோரியும், மருத்துவம், குழந்தைகளின் சுகாதார வசதிகளை உடனடியாக மேம்படுத்தக் கோரியும் செயற்பாட்டாளர்களால் ஒழுங்கு செய்யப்பட்டடிருந்தது.

அமைதிவழியில் நின்று ஐனா பிரதான வாயிலின் முன்பாகப் போராட்டம் நடாத்தப்பட்டபோது டென்மார்க் பொலிசார் போராட்டத்தை இடைனடுவில் தடுத்து நிறுத்தக் கோரியும் தொடர்ந்தும் உரத்தகுரலில் கோசங்கள் எழுப்பப்பட்டதன் காரணமாக உலக உணவுத்திட்டப் பொறுப்பாளர்களால் 4 தமிழ் மக்கள் உள்ளே அழைக்கப்பட்டு நேரடியாகப் போராட்டத்தின் முக்கியத்துவம்பற்றிக் கலந்துரையாடப்பட்டது.
dknews




No comments:

Post a Comment

***!!!!!!!!!!அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!!!!!!***

எமது அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!எமது இணயத்தளம் மிக விரைவில் ஆரம்பிக்க இருக்கின்றது என்பதை அறியத் தருகின்றோம்.பல இன்னல்களையும் தாண்டி இறுதி இலக்கை நோக்கி ஆரம்பிக்கப்படவுள்ளது.இந்த வலைப்பதிவு ஊடாக உங்கள் அனைவரையும் சந்திப்பத்தில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.இப்படிக்கு தாய்மடி இயக்குணர்கள். இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது!! -மேதகு வே. பிரபாகரன்.