Friday, May 8, 2009

முள்ளிவாய்க்கால் மருத்துவமனை அருகே கடும் மோதல்; நோயாளர்களின் உயிருக்கு ஆபத்து: ஐ.சி.ஆர்.சி. எச்சரிக்கை


முல்லைத்தீவு மாவட்டத்தில் தற்காலிக மருத்துவமனை அமைந்திருக்கும் முள்ளிவாய்க்கால் பகுதியில் சிறிலங்கா படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் கடும் மோதல் இடம்பெற்றுவருவதாகத் தெரிவித்திருக்கும் அனத்துலக செஞ்சிலுவைச் சங்கம், இதனால் இங்குள்ள பெருந்தொகையான நோயாளர்கள், மருத்துவப் பணியாளர்கள் மற்றும் அனத்துலக செஞ்சிலுவைச் சங்கப் பணியாளர்களின் உயிர்களுக்கு பெரும் ஆபத்து ஏற்பட்டிருப்பதாக இன்று அறிவித்திருக்கின்றது.
"காயமடைந்த பொதுமக்களையும் அவர்களுடைய உறவினர்களயும் மருத்துவத் தேவைகளுக்காக வெளியேற்றும் செயற்பாடுகளையும் இது பாதித்திருக்கின்றது" என அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் தெற்காசிய நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான ஜக்கியு டி மாயோ தெரிவித்தார்.

வன்னியில் இருந்து 495 நோயாளர்களும் அவர்களுடைய உறவினர்களும் நேற்று வியாழக்கிழமை அனத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் ஆதரவுடன் நேற்று வியாழக்கிழமை 'கிறீன் ஓசன்' கப்பலில் வெளியேற்றப்பட்டனர்.

இதனைவிட மேலும் பல நோயாளர்களும், படுகாயமடைந்தவர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையிலேயே தற்போது தற்காலிக மருத்துவமன அமைந்திருக்கும் பகுதியில் போர்

No comments:

Post a Comment

***!!!!!!!!!!அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!!!!!!***

எமது அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!எமது இணயத்தளம் மிக விரைவில் ஆரம்பிக்க இருக்கின்றது என்பதை அறியத் தருகின்றோம்.பல இன்னல்களையும் தாண்டி இறுதி இலக்கை நோக்கி ஆரம்பிக்கப்படவுள்ளது.இந்த வலைப்பதிவு ஊடாக உங்கள் அனைவரையும் சந்திப்பத்தில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.இப்படிக்கு தாய்மடி இயக்குணர்கள். இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது!! -மேதகு வே. பிரபாகரன்.