Friday, May 22, 2009

முகாமிலிருந்த தமிழ் கூட்டமைப்பு எம்.பி. கனகரத்தினம் விசாரணைக்காக கொழும்பில்

வவுனியா செட்டிகுளம் முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ். கனகரத்தினம் அவர்கள் நேற்று முன்தினம் வியாழக்கிழமை காலை விசாரணைக்காக  பொலிஸாரால் கொழும்புக்கு கூட்டிச்செல்லப்பட்டுள்ளார்.

வன்னியில் போர் நடைபெற்ற காலத்தில் அங்கு தங்கியிருந்த இவர் வன்னியிலிருந்து கடந்த வாரம் வவுனியா சென்றிருந்தார்.

செட்டிகுளம் நலன்புரி முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் கனகரத்தினம் அவர்களை நேற்று முன்தினம் வியாழக்கிழமை காலை கொழும்பிலிருந்து வந்த விசேட பொலிஸ் குழு விசாரணைக்கெனக் கூறி கொழும்புக்கு கூட்டிச்சென்றுள்ளது.

எனினும் அவரது குடும்பத்தினர் தொடர்ந்தும் செட்டிகுளம் நலன்புரி முகாமிலேயே தங்கியுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

***!!!!!!!!!!அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!!!!!!***

எமது அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!எமது இணயத்தளம் மிக விரைவில் ஆரம்பிக்க இருக்கின்றது என்பதை அறியத் தருகின்றோம்.பல இன்னல்களையும் தாண்டி இறுதி இலக்கை நோக்கி ஆரம்பிக்கப்படவுள்ளது.இந்த வலைப்பதிவு ஊடாக உங்கள் அனைவரையும் சந்திப்பத்தில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.இப்படிக்கு தாய்மடி இயக்குணர்கள். இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது!! -மேதகு வே. பிரபாகரன்.