Friday, May 22, 2009

வன்னியில் பணிபுரிந்த டாக்டர்கள் மூவரையும் ஐ.சி.ஆர்.சியின் அதிகாரி சந்தித்தார்

வன்னியில், போரின் மத்தியிலும் கடைசி வரை பணிபுரிந்த அரச டாக்டர்கள் மூவரையும் சந்தித்துப்பேசி அவர்களின் நிலைமையை செஞ்சிலுவைச் சர்வதேசக்குழு (ஐ.சி.ஆர்.சி.)அதிகாரிகள் கேட்டறிந்தனர். 

அவர்களைச் சந்திப்பதற்கான அனுமதியை அரசாங்கம் வழங்கியதாக செஞ்சிலுவைக்குழுவின் பேச்சாளர் சரசி விஜேரத்ன தெரிவித்தார்.

ஐ.சி.ஆர்.சி. கடந்த வியாழக்கிழமை மூன்று டாக்டர்களையும் நேரில் கண்டு அவர்களுடன் தனிப்பட்ட முறையில் பேசியது என்று கூறிய அவர் வேறு விவரம் எதனையும் தெரிவிக்கவில்லை.

இதேவேளை அவர்களில் ஒருவர் காயமடைந்த நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று மற்றொரு தகவல் தெரிவித்தது.

கடந்த 16 ஆம் திகதி சனிக்கிழமைக்குப் பின்னர் அவர்கள் தொடர்பாக முதற் கிடைத்த தகவல் இது.

அவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலைமை தொடர்பாக கருத்துக் கூறுவது செஞ்சிலுவைச் சர்வதேச குழுவின் கொள்கையல்ல என்று ஐ. சி. ஆர்.சியின் மற்றொரு அதிகாரி தெரிவித்தார்.

முல்லைத்தீவு, மக்கள் பாதுகாப்பு வலயத்தில் இருந்து கடந்த 16 ஆம் திகதி வெளியேறிய பின்னர் டாக்டர் தி.சத்தியமூர்த்தி, து.வரதராஜா, எஸ்.சண்முகராஜா ஆகியோர் காணாமல் போயுள்ளனர் என தகவல்கள் வெளிவந்தமை தெரிந்ததே.

அதேவேளை, வவுனியா, மனிக்பாம் முகாமில் செஞ்சிலுவைச் சர்வதேசக் குழு மீண்டும் தனது பணிகளை ஆரம்பித்துள்ளது. இம்மாதம் 21ஆம் திகதி மனிக்பாம் முகாமிலுள்ள சில பகுதிகளுக்கு செஞ்சிலுவைக் குழுவின் அதிகாரிகள் சிலர் செல்ல அனுமதிக்கப்பட்டனர் எனத் தெரிவிக்கப்பட்டது.

அங்குள்ள சகல பகுதிகளுக்கும் செல்ல அனுமதி கிடைக்கலாமென செஞ்சிலுவைச் சர்வதேசக் குழு தெரிவித்துள்ளது. 

No comments:

Post a Comment

***!!!!!!!!!!அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!!!!!!***

எமது அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!எமது இணயத்தளம் மிக விரைவில் ஆரம்பிக்க இருக்கின்றது என்பதை அறியத் தருகின்றோம்.பல இன்னல்களையும் தாண்டி இறுதி இலக்கை நோக்கி ஆரம்பிக்கப்படவுள்ளது.இந்த வலைப்பதிவு ஊடாக உங்கள் அனைவரையும் சந்திப்பத்தில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.இப்படிக்கு தாய்மடி இயக்குணர்கள். இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது!! -மேதகு வே. பிரபாகரன்.