சிறிலங்கா அரசாங்கத்தின் படை நடவடிக்கை தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையும் உலக சுகாதார நிறுவனமும் விசாரணைகளை நடத்தவேண்டும் என இஸ்ரேல் கோரிக்கை விடுத்திருக்கின்றது.
இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது:
சிறிலங்கா அரசாங்கத்தின் படை நடவடிக்கை தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையும் உலக சுகாதார நிறுவனமும் விசாரணைகளை நடத்தவேண்டும். அதற்கான குழுவினரை அவர்கள் அனுப்ப வேண்டும்.
உலக சுகாதார நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பை சிறிலங்காவுக்கு வழங்குவதை எதிர்த்துள்ள இஸ்ரேல், சிறிலங்கா மீது அனைத்துலக விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என தெரிவித்துள்ளது.
இஸ்ரேலின் இந்த அறிவிப்பு சிறிலங்கா அரசாங்கத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இது தொடர்பாக இஸ்ரேலுடன் கலந்துரையாடப்போவதாக சிறிலங்கா அரசு தெரிவித்துள்ளது.
சிறிலங்கா அரசின் கண்மூடித்தனமான படை நடவடிக்கை, மனித உரிமை மீறல்கள் மற்றும் வன்முறைகள் தொடாபாக விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் எனவும் இஸ்ரேல் கோரிக்கை விடுத்திருக்கின்றது.
No comments:
Post a Comment