Wednesday, May 27, 2009

30,000 தமிழர்கள் இலங்கை இராணுவத்தின் தாக்குதலில் ஊனமுற்றுள்ளனர்

இலங்கை இராணுவத்தின் தாக்குதலில் சுமார் 30,000 தமிழர்கள் ஊனமுற்றிருப்பதாக பிரித்தானிய இணையம் தகவல் வெளியிட்டுள்ளது. பிரித்தானியாவில் வெளிவரும் டெலிகிராப் பத்திரிகையின் இணையத்தளம் இச்செய்தியை வெளியிட்டுள்ளது.

கடந்த இரு மாதத்தில் மட்டும் பல்லாயிரக் கணக்கானவர்கள் முழு அங்கவீனம் அல்லது பாதி அங்கவீனப்பட்டு இருப்பதாகவும், பலர் கை, கால்கள் மற்றும் விரல்கள் என பல உறுப்புக்களை இழந்த நிலையில் இருப்பதாகவும் அறியப்படுகிறது. இராணுவத்தின் பிடியில் தற்போது இருக்கும் 2 லட்சத்தி 80 தாயிரம் மக்களில் 10 இல் ஒருவர் அங்கவீனமாக இருப்பதாக சமீபத்தில் தடுப்புமுகாமிற்குச் சென்ற வெளிநாட்டுத் தொன்டு நிறுவனப் பணிப்பாளர் தெரிவிக்கிறார்.

பிரான்ஸை தளமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச அங்கவீனமுற்றோர் அமைப்பானது, (http://www.handicap-international.org.uk/) சிறிய தொழிற்ச் சாலைகளை திருகோணமலையில் நிறுவி, உள்ளூர் மக்கள் உதவியுடன் அங்கவீனமுற்றவர்களுக்கு செயற்கை அங்கங்களை பொருத்திவருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இங்கு இருக்கும் அனாதைக் குழந்தைகள் பற்றி ஏற்கனவே செய்தி வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment

***!!!!!!!!!!அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!!!!!!***

எமது அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!எமது இணயத்தளம் மிக விரைவில் ஆரம்பிக்க இருக்கின்றது என்பதை அறியத் தருகின்றோம்.பல இன்னல்களையும் தாண்டி இறுதி இலக்கை நோக்கி ஆரம்பிக்கப்படவுள்ளது.இந்த வலைப்பதிவு ஊடாக உங்கள் அனைவரையும் சந்திப்பத்தில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.இப்படிக்கு தாய்மடி இயக்குணர்கள். இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது!! -மேதகு வே. பிரபாகரன்.