தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச் செல்வனின் குடும்ப உறுப்பினர்கள் அகதி முகாமிலிருந்து விடுவிக்கப்பட வேண்டுமென கருணா கோரிக்கை விடுத்துள்ளார்.
அண்மையில் மெனிக் பாம் அகதி முகாமிற்கு மேற்கொண்டிருந்த விஜயத்தின் போது தமிழ்ச் செல்வனது மனைவி மற்றும் பிள்ளைகளை தாம் சந்தித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்ச் செல்வனது குடும்ப உறுப்பினர்கள் எவ்வித பயங்கரவாத செயல்களிலும் ஈடுபடாத காரணத்தினால் அவர்கள் சுதந்திரமாக இடம் நகர அனுமதிக்கப்பட வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழ்ச் செல்வனது குடும்ப உறுப்பினர்களை தமது சொந்தங்களுடன் மீள இணைப்பதாக தாம் வாக்குறுதி அளித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
சூசையின் குடும்ப உறுப்பினர்களையும் தாம் சந்திக்க விரும்புவதாகவும் கருணா குறிப்பிட்டுள்ளார்.
அகதி முகாம்களில் நிலவும் குறைபாடுகள் தொடர்பில் ஜனாதிபதியுடன் தாம் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment