சிறுவர்கள் கடத்தப்பட்டு கப்பம் கோரப்படும் சம்பவங்கள் தொடர்பான செய்தியினை யாழ்ப்பாணத்தில் வெளியாகும் தமது நாளாந்த செய்தியை தாளின் முதல் பக்கத்தில் பிரசுரித்தமை தொடர்பில் விசாரிக்கும் பொருட்டு, அதன் ஆசிரியரை நேற்று முன்தினம் இராணுவம் விசாரணைக்கு அழைத்திருந்தது.
இந்த நாளிதழில், பலாலி இராணுவ முகாம் மற்றும் இராணுவத்தினரின் பின்புலத்துடன் இயங்கும் துணை இராணுவக் குழுக்கள் தொடர்பிலும் ஏற்கனவே செய்தி அறிக்கை ஒன்று வெளியாகியிருந்தது.
சிறுவர்கள் கடத்தப்பட்டு, கப்பம் கோரப்படும் சம்பவங்கள், மட்டக்களப்பு திருகோணமலையைத் தொடர்ந்து, தற்போது யாழ்ப்பாணத்திலும் இடம்பெற்று வருகின்றன.
சிறுவர் கடத்தல் தொடர்பில் எவ்வித முறைபாடுகளும் வராத நிலையில் வெளியான இந்த செய்தி போலியானது என கூறியே அவர் விசாரணைக்கு அழைக்கப்பட்டதாக இராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாண குடாநாட்டில் ஊடகவியலாளர்கள் கடத்தப்பட்டும், கொல்லப்பட்டும், விசாரணைகளுக்கு எடுக்கப்பட்டும் வரும் உலகின் பயங்கரமான பகுதியாக காணப்படும் நிலையில் இந்த செய்தி அவர்கள் மத்தியில் ஒருவித அச்சத்தை தோற்றியுள்ளது.
No comments:
Post a Comment