வன்னியில் சிறிலங்கா படையினர் நடத்திய பாரிய மனிதப் பேரவலத்தினை நினைவுகூர்ந்து புலம்பெயர்ந்து தமிழர்கள் அதிகமாக வாழும் பிரான்ஸ், யேர்மனி மற்றும் நோர்வேயின் பேர்கன் நகரிலும் நேற்று துயர நாள் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது. |
பிரான்சில்... பிரான்சில் நேற்று வெள்ளிக்கிழமை துயர நாள் நிகழ்வு நடைபெற்றது. பிற்பகல் 3:30 நிமிடமளவில் தமிழீழ தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டது. சிறிலங்கா அரசாங்கம் நடத்திய பாரிய இன அழிப்பில் தனது பெற்றோரை பலி கொடுத்த சதீஸ் நினைவுச்சுடர் ஏற்ற, தனது உறவுகளை பறிகொடுத்த சுரேஸ், தாயக மக்களை நினைவு கூர்ந்து சிறப்பாக அமைக்கப்பட்ட நினைவுத் தூபியில் மலர் வணக்கம் செலுத்தினார். பிரான்ஸ் தமிழ் கலை பண்பாட்டுக் குழு கலைஞர்களால் பாடல்கள் பாடப்பட்டதுடன் சிறப்புரைகளும் இடம்பெற்றன. படுகொலை செய்யப்பட்ட தாயக உறவுகளை நினைத்து கலங்கிய கண்களோடு மக்கள் மலர் வணக்கம் செலுத்தியதுடன் சுடரேற்றி வணக்கம் செலுத்தினர். யேர்மனிய நகரங்களில்... யேர்மனியில் உள்ள டுசில்டோவ், பிராங்போட்,பேர்லின் ஆகிய நகரங்களில் நேற்று வெள்ளிக்கிழமை துயர நாள் நிகழ்வுகள் நடைபெற்றன. பேரணியாகச் சென்ற மக்கள் சிறிலங்காப் படையினரின் இன அழிப்பு நடவடிக்கையில் லட்சக்கணக்கில் தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டமை மற்றும் சிறிலங்கா அரசாங்கம் நடத்திவரும் தடுப்பு முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் மக்களை காப்பாற்றுமாறு கோரி அமெரிக்கத் தூதரகத்திடம் மனு கையளித்தனர். நோர்வேயின் பேர்கனில்... நோர்வேயின் பேர்கன் நகரில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற துயர நாள் நிகழ்வில் நூற்றுக்கணக்கான தமிழ் மக்கள் கலந்துகொண்டனர். நகரின் முக்கிய பகுதிகள் ஊடாக கறுப்பு ஆடை அணிந்த தமிழ் மக்கள் தமது கைகளில் கறுப்புக் கொடிளை ஏந்தியவாறு ஊர்வலமாகச் சென்றனர். நிகழ்வில் கலந்துகொள்ள வந்தவர்களிடம் இடம்பெயர்ந்த மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ள முகாம்களை ஜக்கிய நாடுகள் சபை பெறுப்பேற்க வேண்டும் என வலியுறுத்தி ஐ.நா.வுக்கு அனுப்புவதற்கு கையெழுத்துக்களும் பெறப்பட்டன. |
Saturday, May 23, 2009
பிரான்ஸ், யேர்மனியில் துயர நாள் கடைப்பிடிப்பு
Subscribe to:
Post Comments (Atom)
***!!!!!!!!!!அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!!!!!!***
எமது அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!எமது இணயத்தளம் மிக விரைவில் ஆரம்பிக்க இருக்கின்றது என்பதை அறியத் தருகின்றோம்.பல இன்னல்களையும் தாண்டி இறுதி இலக்கை நோக்கி ஆரம்பிக்கப்படவுள்ளது.இந்த வலைப்பதிவு ஊடாக உங்கள் அனைவரையும் சந்திப்பத்தில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.இப்படிக்கு தாய்மடி இயக்குணர்கள்.
இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது!! -மேதகு வே. பிரபாகரன்.
No comments:
Post a Comment