Saturday, May 23, 2009

தூக்கு தண்டனையை ஏற்க தயார்:ராஜபக்சே ஆவேசம்

கொழும்பு நகரில் உள்ள இலங்கை பாராளுமன்ற தேசிய பூங்காவில் நடந்த பொதுக்கூட்டத்தில், அதிபர் ராஜபக்சே உரையாற்றினார்.


அப்போது, ‘’இலங்கையில், விடுதலைப்புலிகளுடன் போர் நடத்தி வெற்றி பெற்றதை, குற்றம் என்று கூறி, சர்வதேச போர் குற்ற தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர, சில வெளிநாட்டு சக்திகள் முயன்று வருகின்றன. இதற்காக நான் பயப்பட மாட்டேன். வழக்கு தொடர்ந்தால், சந்திக்க தயாராக இருக்கிறேன்.

விடுதலைப்புலிகளை அழித்தது, குற்றம் என்று நிரூபிக்கப்பட்டால், நான் தூக்கு மேடை ஏற கூட தயாராக இருக்கிறேன். விடுதலைப்புலிகளுடன் போர் நடத்தியது, இந்த நாட்டின் நன்மைக்காகத்தான் என்பதை அனைவரும் உணர வேண்டும். விடுதலைப்புலிகளின் தோல்வி, தமிழர்களின் தோல்வி அல்ல என்பதை உலக தமிழர்கள் ஒப்புக்கொள்ள வேண்டும்.

போர் முடிந்து விட்டதால், இனி இலங்கை பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடையும். இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்’’ என்று பேசினார்.

No comments:

Post a Comment

***!!!!!!!!!!அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!!!!!!***

எமது அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!எமது இணயத்தளம் மிக விரைவில் ஆரம்பிக்க இருக்கின்றது என்பதை அறியத் தருகின்றோம்.பல இன்னல்களையும் தாண்டி இறுதி இலக்கை நோக்கி ஆரம்பிக்கப்படவுள்ளது.இந்த வலைப்பதிவு ஊடாக உங்கள் அனைவரையும் சந்திப்பத்தில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.இப்படிக்கு தாய்மடி இயக்குணர்கள். இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது!! -மேதகு வே. பிரபாகரன்.