Saturday, May 23, 2009

இலங்கைத் தீவில் ஒரு பாகத்தில் பொட்டு அம்மான்

இலங்கைத் தீவில் ஒரு பாகத்தில் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களை ஒருங்கிணைக்கும் முயற்சியில் விடுதலைப் புலிகளின் உளவுப் பிரிவுத் தலைவர் பொட்டு அம்மான் ஈடுபட்டுள்ளதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

விடுதலைப் புலிகள் இயக்கத்தில் தலைவர் பிரபாகரனுக்கு அடுத்த இடத்தில் இருப்பவர் பொட்டு அம்மன். நந்திக்கடல் பகுதியில் பிரபாகரன் கொல்லப்பட்ட போது பொட்டு அம்மானையும் கொன்று விட்டதாகவும், அவர் உடலை எரித்துவிட்டதாகவும் சிங்கள ராணுவம் அறிவித்தது.

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உளவுப்படை தலைவரான பொட்டு அம்மன் இலங்கை கிழக்கு மாகாணத்தில் ஒரு அடர்ந்த காட்டுக்குள் இருப்பதாகக் கூறப்படுகிறது. இலங்கை வடக்கு கிழக்கு மாகாணத்தில் உள்ள விடுதலைப்புலிகள் இயக்கத்தை அவர் மீண்டும் ஒருங்கிணைக்கத் தொடங்கி உள்ளார்.

பிரபாகரன் அல்லது பொட்டு அம்மான் இருவரில் யார் உயிருடன் இருந்தாலும் நாங்கள் வெற்றி பெற்றதாகக் கூற முடியாது என்று சில தினங்களுக்கு முன்புதான் கோத்தபாய ராஜபக்சே கூறியிருந்தார். இப்போது இருவருமே உயிருடன் இருக்கிறார்கள். விரைவில் மக்கள் முன் தோன்றி சுதந்திர போரை வேறு தளத்துக்கு எடுத்துச் செல்லவிருப்பதாக கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையே வரும் செவ்வாய்க்கிழமை இலங்கை அரசு தன் மக்களையே கொடுமையாக அழித்தொழிக்க மேற்கொண்ட உத்திகள் இனப்படுகொலையே என்பதை நிரூக்க ஐநா சபை வரும் செவ்வாய்க்கிழமை கூடுகிறது. அமெரிக்கா,பிரிட்டன்,பிரான்ஸ் போன்ற நாடுகளின் இடையறாத முயற்சி காரணமாக இந்த விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.

No comments:

Post a Comment

***!!!!!!!!!!அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!!!!!!***

எமது அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!எமது இணயத்தளம் மிக விரைவில் ஆரம்பிக்க இருக்கின்றது என்பதை அறியத் தருகின்றோம்.பல இன்னல்களையும் தாண்டி இறுதி இலக்கை நோக்கி ஆரம்பிக்கப்படவுள்ளது.இந்த வலைப்பதிவு ஊடாக உங்கள் அனைவரையும் சந்திப்பத்தில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.இப்படிக்கு தாய்மடி இயக்குணர்கள். இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது!! -மேதகு வே. பிரபாகரன்.