Saturday, May 23, 2009

வன்னியில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பல்லாயிரக்கணக்கான மக்களின் நிலை வெளியாகவில்லை


வன்னியின் கிளிநொச்சியில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இன்னும் முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் கிளிநொச்சியில் முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் நிலை இன்னும் தெரியவரவில்லை.

முல்லைத்தீவு முள்ளிவாய்க்காலில் இறுதியாக படையினரால் நடத்தப்பட்ட இனப்படுகொலையின் பின்னர், தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆயுதப்பிரிவை சாராத அரசியல் மற்றும் நீதித்துறையில் கடமை புரிந்தவர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோரும் இந்த முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் இன்னும் வவுனியா நலன்புரி முகாம்களுக்கு அனுப்பப்படவில்லை.இந்தநிலையில் இவர்கள் வசதிகள் குறைந்த நிலையில் பராமரிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

உத்தியோகபூர்வ தகவல்களின்படி, மே மாதம் 16 ஆம் திகதி வரை, வவுனியா நலன்புரி முகாம்களுக்கு வன்னியில் 56 ஆயிரத்து 361 குடும்பங்களை சேர்ந்த 1,70,553 பேர் அனுப்பப்பட்டுள்ளனர்.
 
எனினும் கிளிநொச்சியில் முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் நிலை இன்னும் தெரியவரவில்லை.
 
இதேவேளை நேற்று கிளிநொச்சிக்கு விஜயம் செய்த இராணுவ தளபதி சரத் பொன்சேகா, காயமடைந்த நிலையில் சரணடைந்தவர்களை பார்வையிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment

***!!!!!!!!!!அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!!!!!!***

எமது அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!எமது இணயத்தளம் மிக விரைவில் ஆரம்பிக்க இருக்கின்றது என்பதை அறியத் தருகின்றோம்.பல இன்னல்களையும் தாண்டி இறுதி இலக்கை நோக்கி ஆரம்பிக்கப்படவுள்ளது.இந்த வலைப்பதிவு ஊடாக உங்கள் அனைவரையும் சந்திப்பத்தில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.இப்படிக்கு தாய்மடி இயக்குணர்கள். இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது!! -மேதகு வே. பிரபாகரன்.