Monday, May 18, 2009

மோதல் பகுதிக்கு ஐ.நா.வை அனுமதிக்க ஐரோப்பிய ஆணைக்குழு வலியுறுத்தல்

வட இலங்கையின் மோதல் வலயத்திற்கு ஐ.நா. செல்வதற்கு முழு அளவில் வழங்கப்பட வேண்டுமென ஐரோப்பிய ஆணைக்குழு நேற்று திங்கட்கிழமை வலியுறுத்தியிருக்கிறது.
கடுமையான யுத்தம் முடிவடைந்துள்ளதையடுத்து ஆறுதல் படுகிறேன். அதேசமயம் பொதுமக்களின் நிலைமையானது இப்போதும் மிகவும் நெருக்கடியானதாக உள்ளது என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுகளுக்கான ஆணையாளர் பெனிற்றா பெரேரா வோல்ட்னர் கூறியுள்ளார்.

பிரசல்ஸில் இடம்பெற்ற ஐரோப்பிய ஒன்றிய வெளிவிவகார அமைச்சர்களின் மாநாட்டில் அவர் நேற்று கலந்துகொண்டார்.

யுத்த வலயத்தில் இப்போதும் மக்கள் இருப்பதை நாம் அறிவோம். பலர் வெளியேறியுள்ளனர். அங்கு முழு அளவில் ஐ.நா. செல்வதே இப்போது மிகவும் முக்கியமானதாகும் என்றும் பெனிற்றா கூறியுள்ளார்.

இதேவேளை ஐ.நா. அமைப்புகள், சர்வதேச செஞ்சிலுவைச்சங்கம் ஆகியவை உடனடியாக அப்பகுதிக்குச் செல்லவேண்டும். ஏனெனில் பல்லாயிரக்கணக்கான மக்கள் உண்மையிலேயே நிராதரவான நிலையில் உள்ளனர் என்று சுவீடிஷ் வெளிவிவகார அமைச்சர் கார்ல் பில்ட்ற் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஜுலையில் ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமைப் பதவியை சுவீடன் ஏற்றுக்கொள்ளவுள்ளது.

No comments:

Post a Comment

***!!!!!!!!!!அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!!!!!!***

எமது அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!எமது இணயத்தளம் மிக விரைவில் ஆரம்பிக்க இருக்கின்றது என்பதை அறியத் தருகின்றோம்.பல இன்னல்களையும் தாண்டி இறுதி இலக்கை நோக்கி ஆரம்பிக்கப்படவுள்ளது.இந்த வலைப்பதிவு ஊடாக உங்கள் அனைவரையும் சந்திப்பத்தில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.இப்படிக்கு தாய்மடி இயக்குணர்கள். இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது!! -மேதகு வே. பிரபாகரன்.