Sunday, May 24, 2009

பிரித்தானியாவின் வரலாற்றை மாற்றி எழுதிய பாராளுமன்ற முன்றலில் நடைபெற்ற வணக்க நிகழ்வு


பாராளுமன்றத்தின் முன் மக்கள் படுகொலை செய்யப்பட்ட உறவுகளை அந்த உறவுகளுக்காய் இறுதிவரை போராடி மரணித்த உணர்வான தமது போராளிகள் என அனைவரையும் மனதிலே தாங்கி அந்த இழப்புகளை தாங்கமுடியாது விம்மி வெடித்து விழிநீரை வடித்தவண்ணம் பாராளுமன்ற சதுக்கத்தை

நிறைத்து கறுத்தக்கொடி விரித்ததுபோல புல்வெளி முழுதும் எமது மக்கள் வணக்கம் செய்ய நிறைந்தனர். சரியாக 6மணிக்கு அகவணக்கத்துடன் நிகழ்வு ஆரம்பமாகின. மக்கள் வெள்ளம்போல் வந்து அலை அலையாக தமது வணக்கத்தை செலுத்த வந்திருந்தனர்.

 என்றும் காணாதவகையில் இந்த வணக்க நிகழ்விற்கு இளையோர்களே அதிகம் கலந்து கொண்டனர். தேசியத் தலைவர் கண்ட கனவு பலித்துவிட்டது என்றே பாராளுமன்ற முன்றலில் எண்ணத் தோணியது. எங்கு பார்த்தாலும் இளையவர்கள் தாம் எதுவரினும் எமது தாயக விடுதலைக்காய் தோள் கொடுப்போம் என்று அனைத்துப் பணிகளையும் முன்னெடுத்து இந்த நிகழ்வை வணக்க நிகழ்வு என்பதைவிட ஒரு உணர்ச்சி பொங்க எழுச்சி நிகழ்வாகவே நடாத்தினர்.

வணக்க பீடத்தில் பொதுமக்களுக்கு ஓர் கல்லறையும் போராளிகளுக்கு துப்பாக்கி ஒன்று நிலத்தில் தலைகீழாக வைக்கப்பட்டு நடுவே தமிழீழம் சுட்டிகளில் மெழுகுவர்த்தி ஏற்றப்பட்டு தாயகத் தீ அணையாது என அர்த்தப்படுத்தப்பட்டது. தாயத்தில் மக்கள் கொடுத்த உயிரும் மாவீரர்களின் தியாகமும் தாயக விடுதலைக்காவே. ஆதலால் எந்தத் தருணத்திலும் தாங்கள் இந்த விடுதலைத் தீயை அணைய விடமாட்டோம் என்றே அனைவரும் வணக்கம் செய்தது அங்கு நின்ற அனைவரையும் உருக்கமாக விடுதலையின்பால் இறுகச் செய்தது.

 நள்ளிரவையும் தாண்டி மக்கள் தமது வணக்கத்தை உணர்வுடனும் உருக்கமாகவும் செய்து கொண்டிருக்க வரலாற்றில் முதல் முறையாக பாராளுமன்ற சதுக்கத்தை சுற்றிவர மெழுகுவர்த்திகள் ஏற்றப்பட்டு எங்கள் வேதனைகளையும் எமது உறுதியையும் காட்டுவது போல இருந்தது. விடுதலையின் தீ புலத்தில் தொடர்ந்து கொழுந்து விட்டெரியும் இந்தச் சுடர் தாயகத்தை மீட்க மக்களைக் காக்க என்றென்றும் எரியும் என்பதையே காட்டிநின்றது.

No comments:

Post a Comment

***!!!!!!!!!!அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!!!!!!***

எமது அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!எமது இணயத்தளம் மிக விரைவில் ஆரம்பிக்க இருக்கின்றது என்பதை அறியத் தருகின்றோம்.பல இன்னல்களையும் தாண்டி இறுதி இலக்கை நோக்கி ஆரம்பிக்கப்படவுள்ளது.இந்த வலைப்பதிவு ஊடாக உங்கள் அனைவரையும் சந்திப்பத்தில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.இப்படிக்கு தாய்மடி இயக்குணர்கள். இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது!! -மேதகு வே. பிரபாகரன்.