Sunday, May 24, 2009

நீர்கொழும்பில் தமிழர்கள் மீது சிங்களவர்கள் சிலர் தாக்குதல்

நீர்கொழும்பு தமிழ் குடும்பம் ஒன்றின் மீது, சிங்கள காடையர்கள் சிலர் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இராணுவ வெற்றிகளை கொண்டாடி வரும் சிங்கள பேரினவாதக் குழு ஒன்று, நீர்கொழும்பில் உள்ள தமிழ் குடும்பம் ஒன்றின் குடியிருப்பினுள் நுழைந்து, அவர்களிடம் தமது கொண்டாட்டங்களுக்காக பணத்தினை வசூலித்துள்ளது.

இதற்கு மறுப்பு தெரிவித்த குடும்பத்தவர்களை தாக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இராணுவ வெற்றிகளை கொண்டாடி வரும் சிங்கள பேரினவாதக்குழுக்களும், இளைஞர்களும், பாதைகளில் நடக்கின்ற தமிழர்கள் மீது முட்டைகளையும் அழுகிய காய்கறிகளையும் வீசி வருகின்றனர்.

இதற்கிடையில் நீர்கொழும்பு கடற்கரையோரமாக நடந்து சென்ற தமிழ் இளைஞர் ஒருவர் மீது, சிங்கள இளைஞர்கள் சிலர் தாக்கியுள்ளதாகவும், தமிழர்களின் எதிர்கால நிலை இதுதான் என அவர்கள் தெரிவித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை கொழும்பு உட்பட பல்வேறு பகுதிகளில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன.

மலையகத்தின் பல்வேறு தோட்டங்களின் உயர் அதிகாரிகள், தமிழர்களை இராணுவ வெற்றியினை முன்னிறுத்தி தூற்றி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கெதிராக மலையத்தின் பல தோட்டப்பகுதிகளில் பொதுமக்கள் பணிப்பகிஷ்கரிப்பை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment

***!!!!!!!!!!அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!!!!!!***

எமது அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!எமது இணயத்தளம் மிக விரைவில் ஆரம்பிக்க இருக்கின்றது என்பதை அறியத் தருகின்றோம்.பல இன்னல்களையும் தாண்டி இறுதி இலக்கை நோக்கி ஆரம்பிக்கப்படவுள்ளது.இந்த வலைப்பதிவு ஊடாக உங்கள் அனைவரையும் சந்திப்பத்தில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.இப்படிக்கு தாய்மடி இயக்குணர்கள். இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது!! -மேதகு வே. பிரபாகரன்.