![]() |
பான் கீ மூன் இலங்கை வந்திருந்து வேளையில் அவரையும், ஐக்கிய நாடுகளின் பிரதிநிதிகளையும் சந்திப்பதற்கு, தமிழ் தேசிய கூட்டமைப்பு பல்வேறு வழிகளில் முயற்சித்து வந்தது. ஏற்கனவே இலங்கைக்கு வருவதற்கு முன்னர், தமிழ் கட்சிகளை சந்தித்து கலந்துரையாடவிருப்பதாகவும் பான் கீ மூன் தெரிவித்ததாக, ஐக்கிய நாடுகளின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்திருந்தார். எனினும், அதற்கு முதலில் இருந்தே, அரசாங்கம் பல்வேறு காரணங்களை காட்டி, தடை விதித்து வந்தது. இந்த நிலையில் நேற்று பான் கீ மூன் இலங்கையில் இருந்த புறப்படும் வேளையில், அவரை சந்திக்கும் வாய்ப்பை ஏற்படுத்தி தருவதாக வெளிவிவகார அமைச்சு, தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு தெரிவித்திருந்தது. விமான நிலையத்தில் வைத்து இடம்பெறவிருந்த இந்த சந்திப்புக்காக தமிழ் தேசிய கூட்டமைப்பினர் நேற்று அங்கு சென்றிருந்தனர். எனினும் சுமார் ஒரு மணித்தியாலங்களுக்கும் மேலாக காத்திருந்த போதும், பான் கீ மூனையும், ஐக்கிய நாடுகளின் பிரதிநிதிகளையும் சந்திக்க முடியமல் போனதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தகவல்கள் தெரிவிக்கின்றன. பான் கீ மூனை சந்திக்க விமானநிலையத்தில் காத்திருந்த வேளையில், சிறிலங்கா இராணுவத்தினரின் கெடுபிடிகளும் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் மீது மேற்கொள்ளப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. |
Sunday, May 24, 2009
பான் கீ மூனை சந்திக்க தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு அரசாங்கம் தடை: ஒரு மணித்தியாலம் விமான நிலையத்தில் காத்திருந்தும் ஏமாற்றம்.
Subscribe to:
Post Comments (Atom)
***!!!!!!!!!!அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!!!!!!***
எமது அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!எமது இணயத்தளம் மிக விரைவில் ஆரம்பிக்க இருக்கின்றது என்பதை அறியத் தருகின்றோம்.பல இன்னல்களையும் தாண்டி இறுதி இலக்கை நோக்கி ஆரம்பிக்கப்படவுள்ளது.இந்த வலைப்பதிவு ஊடாக உங்கள் அனைவரையும் சந்திப்பத்தில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.இப்படிக்கு தாய்மடி இயக்குணர்கள்.
இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது!! -மேதகு வே. பிரபாகரன்.
No comments:
Post a Comment