Sunday, May 24, 2009

பிரான்சில் மாபெரும் அடங்காப்பற்று பேரணியும் ஒன்றுகூடலும்

பிரான்சின் இளையோர் அமைப்பும்,பிரான்சின் தமிழ் சமூகமும் இணைந்து நடாத்திய மாபெரும் அடங்காப்பற்றுப்பேரணியும் ஒன்றுகூடலும் பேரெழுர்ச்சியோடு நடைபெற்றுள்ளது.

சிறிலங்கா அரசானது தமிழர்களை கொத்துக்கொத்தாகக் கொன்று குவித்து ஊழிக்கூத்தாடி பெரும் தமிழினப் படுகொலை செய்தும், மனித குலமே நினைத்துப் பார்க்க முடியாத இழி குற்றங்கள் புரிந்தும் இன்று உலகிலேயே மனிதவுரிமைகளை உச்சமாய் மீறும் முதன்மை நாடாகவும் இருக்கின்றது. 

தமிழர்களின் போராட்டத்தை முற்றாக ஒழித்து விட்டோம் என்று தம்பட்டம் அடித்துக்கொண்டு தமிழர்களின் இரத்தத்தில் ஏறி நின்று வெற்றியைக் கொண்டாடும் இந்த வேளைகளில், உறவுகளை இழந்து புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழினம் கோபத்தோடும்,அடங்காப்பற்றோடும் பேரெழுச்சி கொண்டு தமிழீழத் தாகத்துடன் தம் விடுதலைக்குரலை உலகின் செவிகளில் உரக்கச்சொல்லி வருகிறார்கள். 

மே-23 பிரான்சில் நடைபெற்ற மாபெரும் அடங்காப்பற்றுப் பேரணி பி.ப. 2மணிக்கு ஆரம்பமாகி பிரதான வழியாக தமிழீழத் தேசியக்கொடியையும்,பிரெஞ்சு நாட்டுத் தேசியக்கொடியையும், ஐரோப்பிய ஒன்றியக்கொடியையும், தமிழீழத் தேசியத்தலைவரின் படத்தினையும் ஏந்தியபடி பேரெழுச்சியோடு நகர்ந்து stade charlety எனும் விளையாட்டுத்திடலை வந்தடைந்தது. 

மாலை 5மணக்கு ஆரம்பமான வணக்க நிகழ்வில் எம் தேசத்திற்காக உயிர்நீத்த மாவீரர்களுக்காகவும், மக்களுக்காகவும் நினைவுச்சுடர் ஏற்றப்பட்டது. அதனைத்தொடர்ந்து அகவணக்கம், மலர் வணக்கம் இடம்பெற்றது. இளையோர் அமைப்பு, மகளிர் அமைப்பு,தமிழர் ஒருங்கிணைப்புக்குழு செயற்பாட்டாளர்கள், வருகை தந்திருந்த முதன்மையானவர்கள் மலர் வணக்கம் செய்ததைத் தொடர்ந்து நீண்ட நெடும் ஒழுங்கில் நின்ற பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் சிறப்பாக அமைக்கப்பட்டிருந்த நினைவுத்தூபியில் மலர்களை வைத்து வணக்கம் செலுத்தினர். 

தெடர்ந்து தமிழ் பிரெஞ்சு ஆங்கிலம் ஆகிய மொழிகளில் சிறப்புரைகள் இடம்பெற்றன. பல்கலைக்கழகப்பேராசிரியர்கள், மாநகர, நகர முதல்வர்கள், சட்டவாளர்கள், ஐரோப்பிய பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், படைப்பாளிகள், இலங்கைக்கான ஐரிஸ் சமாதான அமைப்பைச்சார்ந்த சிறப்புப்பேச்சாளர்கள், பல்கலைக்கழக மாணவர் பேரவைப்பேச்சாளர், நகரசபைப்பிரதிநிதிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர். 

தமிழன அழிப்பை செய்தவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் எனவும், தமிழர்களின் விடுதலையும், அவர்களுக்கான தனியரசும் அமைவது காலத்தின் தேவை எனவும் தெரிவித்த பேச்சாளர்கள், சிறிலங்கா அரசின் இனப்படுகொலையை சர்வசேத்தின் முன் கொண்டுபோய் நிறுத்துவதற்கான சகல முயர்சிகளையும் மேற்கொள்வதாகவும், சோர்வடையாது புலம்பெயர் தமிழ் மக்கள் தொடர்ச்சியாகப்போராட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர். மேலும் தமிழ் மக்களின் பேரவலத்ததை காடடும் பிரான்சு தமிழர் கலைபண்பாட்டுக்கழகத்தின் கலைப்படைப்புக்களும், கலைஞர்களால் எழுர்ச்சி நடனமும், தாயக நினைவு சுமந்த பாடல்களும் பாடப்பட்டன. 

அத்தோடு பிரான்சிலிருந்து புறப்பட்டுள்ள வணங்கா மண் கலம் தற்போது சர்வதேசக்கடற்பரப்பில் பயணம் செய்துகொண்டிருப்பதாகவும் இக்கலத்திலுள்ள பொருட்கள் வதைமுகாம்களில் வாடும் எம் உறவுகளின் கரங்களில் சேர்க்க வேண்டிய பெரும் பொறுப்பை சர்வதேசம் ஏற்கவேண்டும் அதற்கு புலமபெயர் தமழ் மக்கள் சர்வதேச அமைப்புக்களிற்கு தொடர் அழுத்தங்களை வழங்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இரவு 9மணியளவில் மீண்டும் உறவுகளை செஞ்சில் சுமந்து தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம் என உரக்கக்கூறி நிகழ்வு நிறைவு பெற்றது. 

பிரான்சில் நடைபெறும் அடுத்த போராட்டம் பற்றிய அறிவித்தல் உடகங்களில் தெரிவிக்கப்படும் எனவும் கூறப்ட்டுள்ளது. 

வருகை தந்த முதன்னையானவர்களும் பேச்சாளர்களும். 

- pierre (parti communiste maxiste de france) 
- alain pojolat (NPA) 
- Denis Godard (NPA) 
- stephane gatignon (maire de sevran, vonseiller général de seine saint denis) 
- david fabre (conseiller municipal à savigny sur orge) 
- jacques vovard (élu communiste à argenteuil) 
- mesana (avocat) 
- brain maqukle (irish forum of peace in sri lanka ) 
- jude lal fernando (irish forum of peace in sri lanka ) 
- patrick le hyaric (parti communiste, journal humanité) 
- christophe borgel (parti socialiste) 
- corinne benabdallah (maire adjointe, délégué aux droits des femmes, à la vie associative et à l'animal dans la ville) 
- yves-jean gallas (le mouvement de la paix) 
- anthony roussel 
- Mme ariatnam 
- M. puvaneswaran 
- Rodrig Arenas 
- KP Aravinthan 
- Mirielle gitton (parti radical de gauche, 1er adjoint clichy) 
- M. capitanio 
- Jean marie julia 
- Kirupa (fraco-tamoul strasbourg) 
- Mme mylvaganam siva (commerçants tamouls de france) 
- stéphanie (comité des femmes tamoules de france) 
- shalini (TCC)

No comments:

Post a Comment

***!!!!!!!!!!அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!!!!!!***

எமது அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!எமது இணயத்தளம் மிக விரைவில் ஆரம்பிக்க இருக்கின்றது என்பதை அறியத் தருகின்றோம்.பல இன்னல்களையும் தாண்டி இறுதி இலக்கை நோக்கி ஆரம்பிக்கப்படவுள்ளது.இந்த வலைப்பதிவு ஊடாக உங்கள் அனைவரையும் சந்திப்பத்தில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.இப்படிக்கு தாய்மடி இயக்குணர்கள். இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது!! -மேதகு வே. பிரபாகரன்.