தமிழர்களுக்கு தமிழர்கள் தான் துணை என்பதை உணர்ந்து சிறீலங்காவின் தடுப்புமுகாம்களில் முட்கம்பிகளுக்குள் அடைபெற்றிருக்கும் மக்களை காப்பாற்றும் படியும் தமிழ் மக்களுக்கு ஒரு நிரந்தர தீர்வு கிடைக்க உதவும் படியும் பிரித்தானிய அரசாங்கத்தை வலியுறுத்தி இன்றும் (20.05.09) பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் போராட்டத்தை பிரித்தானிய நாடாளுமன்ற சதுக்கத்தில் தொடர்கின்றனர்.
இதேவேளை பிரித்தானிய அரசாங்கத்தின் உறுதிமொழிகளுக்கு மதிப்பளித்து 24 நாட்களுக்கு பின்பு தன்னுடைய பட்டினி போராட்டத்தை இடைநிறுத்திய பரமேஸ்வரன் இன்று இரவு 9 மணிக்கு தன்னுடைய பட்டினி போராட்டத்தை திரும்பவும் ஆரம்பித்துள்ளார்.
அங்கு கூடியிருந்த மக்களுக்கு அவர் உரையாற்றிய போது தான் இனியும் பிரித்தானிய அரசாங்கத்தின் உறுதிமொழிகளுக்கு பணிந்து போகப்போவதில்லை என்றும் என்னுடைய கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டால் மட்டும் தான் பட்டினி போராட்டத்தை நிறுத்துவேன் என்று கூறினார்.
அவரின் கோரிக்கைகள் பின்வருமாறு:
1. சிறிலங்கா இராணுவத்தின் மேற்பார்வையில் தடை முகாங்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள தமிழ்மக்கள் அனைவரையும் உடனடியாக ஐக்கியநாடுகள் சபை பொறுப்பெடுப்பதன் மூலம் அவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும்
2. சர்வதேச ஊடகங்கள் எந்தவித தடையும் இன்றி சிறிலங்காவின் எந்த பாகத்திற்கும் செல்ல வழியமைத்து கொடுக்கவேண்டும்.
3. சிறிலங்கா அரசுமேற்கொண்டுவருகின்ற இனப்படுகொலையை கண்கூடாக கண்டு கொண்டுள்ள சர்வதேசமானது இவ்வினப்படுகொலையினை தடுத்து நிறுத்தி தமிழ்மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்க வேண்டும்.
4. இக்கட்டான சூழ்நிலையிலும் தமது மக்களின் நிலை கருதி சர்வதேசத்தின் அனைத்து வேண்டு கோள்களையும் ஏற்று செயற்பட்ட தமிழர்களின் விடுதலை இயக்கம் மீதான தடையை நீக்கவேண்டும்.
No comments:
Post a Comment