Thursday, May 21, 2009

ஆறு மாதங்களில் அகதிகள் மீள் குடியமர்த்தப்படுவார்கள்: இந்திய அதிகாரிகளிடம் இலங்கை அரசு வாக்குறுதி

இலங்கையில் போரினால் இடம் பெயர்ந்த மக்களில் பெரும்பாலானவர்களை, அடுத்த 6 மாதங்களுக்குள் அவர்கள் ஏற்கனவே வாழ்ந்து வந்த இடங்களில் மீள்குடியமர்த்த திட்டமிட்டிருப்பதாக இந்தியாவிடம் இலங்கை அரசு தெரிவித்துள்ளது.
விடுதலைப் புலிகள் இயக்கம் இராணுவ ரீதியாக முற்றிலும் தோற்கடிக்கப்பட்டுவிட்டதாக இலங்கை அரசு அறிவித்துள்ள நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க, இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன், வெளியுறவுச் செயலர் சிவசங்கர் மேனன் ஆகிய இருவரும் கொழும்பு சென்றனர்.

வியாழக்கிழமை காலை, இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் மூத்த அதிகாரிகளைச் சந்தித்து ஆலோசனை நடத்தினார்கள். பல்வேறு அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடனும் அவர்கள் ஆலோசனை நடத்தினார்கள்.

இராணுவ நடவடிக்கைகள் முடிவடைந்துவிட்ட நிலையில், நிவாரணம், மறுவாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் நிரந்தர அரசியல் தீர்வு உள்ளிட்டவற்றில் கவனம் செலுத்த வேண்டிய தருணம் வந்துவிட்டதாக இருதரப்பும் ஒப்புக் கொண்டதாக, கொழும்பில் உள்ள இந்தியத் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அரசைப் பொறுத்தவரை, கண்ணிவெடிகளை அகற்றுதல், சிவில் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துதல், மீண்டும் குடியிருப்புக்களைக் கட்டிக்கொடுத்தல் ஆகியவற்றில் அனைத்து உதவிகளையும் செய்யத் தயாராக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

இலங்கை இனப் பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வு காணப்பட வேண்டியது அவசர அவசியம் என இருதரப்பிலும் வலியுறுத்தப்பட்டது.

அதன்படி, இந்திய – இலங்கை ஒப்பந்தத்தை அமுல்படுத்த வழிசெய்யும் 13-வது சட்டத் திருத்தத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை அரசு குறிப்புணர்த்தியிருப்பதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

***!!!!!!!!!!அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!!!!!!***

எமது அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!எமது இணயத்தளம் மிக விரைவில் ஆரம்பிக்க இருக்கின்றது என்பதை அறியத் தருகின்றோம்.பல இன்னல்களையும் தாண்டி இறுதி இலக்கை நோக்கி ஆரம்பிக்கப்படவுள்ளது.இந்த வலைப்பதிவு ஊடாக உங்கள் அனைவரையும் சந்திப்பத்தில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.இப்படிக்கு தாய்மடி இயக்குணர்கள். இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது!! -மேதகு வே. பிரபாகரன்.