பிரபாகரன் செய்த ஏற்பாடுபடி இலங்கை முழுவதும் 3 ஆயிரம் பேர் கொண்ட கொரில்லாபடை ஊடுருவி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இலங்கையில் விடுதலைப்புலிகளின் தலைநகரமாக திகழ்ந்த கிளிநொச்சி வீழ்ந்ததுமே இனி சிங்கள ராணுவத்தை வெல்வது கடினம் என்று பிரபாகரன் கருத்தினார். எனவே போரில் தோற்று போனாலும் அடுத்த கட்டமாக ஈழப்போர் தொடர்ந்து நடக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு ஏற்பாடுகளை செய்தார்.தனது தலைமையிலான படை தொடர்ந்து சிங்கள படையுடன் மோத வேண்டும் இதில் தோல்வி ஏற்பட்டு விட்டால் ஆங்காங்கே கொரில்லா தாக்குதல் நடத்த வேண்டும் என்று முடிவு செய்தார்.
இதற்காக சிறுத்தைபடையணி என்ற 3 ஆயிரம் பேர் கொண்ட கொரில்லா படையை தயார் செய்தார். இவர்கள் 400 பேராக பிரிக்கப்பட்டு இலங்கை முழுவதும் அனுப்பப்பட்டனர். அவர்கள் இப்போது யாருக்கும் தெரியாமல் காடுகளில் பதுங்கி உள்ளனர்.
கொரில்லா படையினர் தாக்குதலை எந்த நேரத்திலும் தொடங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த காலங்களில் கொரில்லா போர் முறையில் தான் சிங்கள படையினரை விடுதலைப்புலிகள் திக்கு முக்காட செய்தனர். எனவே கொரில்லா போரை தொடங்கினால் சிங்கள ராணுவத்துக்கு பெரும் தலைவலி ஏற்படலாம்.
No comments:
Post a Comment