![]() |
வடமராட்சி மீனவ சமூகத்தின் பிரதிநிதிகளுடன் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இராணுவத்தினர் இதனை தெரிவித்துள்ளனர். பகல் வேளைகளில் மாத்திரம் கட்டுமரங்களில் சென்று காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரையில் மீன் பிடியில் ஈடுபட இராணுவம் தற்போது அனுமதிக்கிறது. இந்த மீன்பிடி நேரத்தை காலை 4 மணியில் இருந்து மாலை 5 மணிவரையில் 3 மணித்தியாலங்களால் நீடிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. எனினும் பாதுகாப்பு காரணங்களால் இதற்கு அனுமதியளிக்க முடியாது என இராணுவம் தெரிவித்துள்ளது. இதற்கிடையில் சைவ ஒழுங்கமைப்பு பிரதிநிதிகளுக்கான கொழும்பு செல்லும் அனுமதிப்பத்திர விநியோகத்தை துரிதப்படுத்துமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டது. எனினும் அது தொடர்பில் கொழும்பு அதிகாரிகளே முடிவு செய்ய வேண்டும் எனவும் இராணுவம் குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, சைவ ஒழுங்கமைப்பு பிரதிநிதிகள் கொழும்பு செல்வதற்கான அனுமதியினை பெற்றுக் கொள்வதற்காக சுமார் 3 மாதகாலமாக விண்ணப்பித்து காத்திருக்கின்றனர். |
Monday, May 25, 2009
யாழ். வடமராட்சி கடலில் மீன்பிடிக்க அனுமதி கோரப்பட்டுள்ளது
Subscribe to:
Post Comments (Atom)
***!!!!!!!!!!அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!!!!!!***
எமது அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!எமது இணயத்தளம் மிக விரைவில் ஆரம்பிக்க இருக்கின்றது என்பதை அறியத் தருகின்றோம்.பல இன்னல்களையும் தாண்டி இறுதி இலக்கை நோக்கி ஆரம்பிக்கப்படவுள்ளது.இந்த வலைப்பதிவு ஊடாக உங்கள் அனைவரையும் சந்திப்பத்தில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.இப்படிக்கு தாய்மடி இயக்குணர்கள்.
இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது!! -மேதகு வே. பிரபாகரன்.
No comments:
Post a Comment