Monday, May 25, 2009

விடுதலைப்புலிகளுக்கு பின்னர் இலங்கை அரசாங்கத்திற்கும் தமிழர்களுக்கும் இடையில் பாரிய இடைவெளி ஏற்பட்டுள்ளது


விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டதன் பின்னர் சிங்கள பேரினத்திற்கும் தமிழர்களுக்கும் இடையில் பாரிய இடைவெளி தோன்றியுள்ளதாக சுவிற்ஸர்லாந்தில் உள்ள ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழீழ விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்டதாக அரசாங்கம் அறிவித்துவரும் நிலையிலும் புலம்பெயர்ந்தவர்களின் சக்தியின் மூலம் மீண்டும் அவர்கள் தமது அரசியல் பலத்தை தக்க வைத்துள்ளனர் என அவர்கள் சுட்டிகாட்டியுள்ளனர். 

அவர்கள் எதிர்காலத்தில் இலங்கைக்குள்ளும் மீண்டும் நுழைந்து கெரில்லா தாக்குதல்களை நடத்துவார்கள் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். 

இதற்கிடையில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் சபையில் இலங்கையின் இறுதி யுத்தத்தின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க் குற்றங்கள் தொடர்பில் ஆராயப்படவுள்ளன.

இது நிரூபிக்கப்பட்டால் சிங்கள பேரினவாதத்திற்கு கீழ் தமிழர்களால் வாழ முடியாது என்பது ஊர்ஜிதமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

1987ம் ஆண்டின் சீர்திருத்தப்பட்ட 13ம் அரசியல் யாப்பு உண்மையில் இலங்கை அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தக் கூடிய சாத்தியம் இருப்பதாக தெரியவில்லை எனவும் அப்படி நடைமுறைப்படுத்தினால் அதன் முழு அதிகாரங்களும் வழங்கப்படுமா என்பது சந்தேகமே என சுவிஸ் ஆய்வாளர்கள்  சுட்டிக்காட்டியுள்ளனர். 

இடம்பெயர்ந்துள்ளவர்களை மீள் குடியேற்றவும், அவர்களுக்கான மனிதாபிமான நடவடிக்கைகளை வழங்கவும் சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்பு அரசாங்கத்திற்கு முக்கியமாக தேவை என்பது அவர்களின் கருத்தாகும். 

அண்மையில் சர்வதேச நாணய நிதியத்தின் 1.9 பில்லியன் டொலர்கள் கடன் தொகையினை இலங்கைக்கு வழங்குவதற்கான நேரம் இது இல்லை என அமெரிக்க இராஜாங்க செயலாளர் தெரிவித்திருந்தார். 

இந்தநிலையில் கொழும்பு அரசாங்கத்திற்கு இந்த நிதி அத்தியாவசியமாக இருப்பதாலேயே இந்த கடன் தொகையினை பெற பல்வேறு வழிகளில் முயற்சித்து வருவதாக சுவிஸ் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

***!!!!!!!!!!அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!!!!!!***

எமது அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!எமது இணயத்தளம் மிக விரைவில் ஆரம்பிக்க இருக்கின்றது என்பதை அறியத் தருகின்றோம்.பல இன்னல்களையும் தாண்டி இறுதி இலக்கை நோக்கி ஆரம்பிக்கப்படவுள்ளது.இந்த வலைப்பதிவு ஊடாக உங்கள் அனைவரையும் சந்திப்பத்தில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.இப்படிக்கு தாய்மடி இயக்குணர்கள். இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது!! -மேதகு வே. பிரபாகரன்.